என்னுடைய அடுத்த படம் வேறுமாதிரி இருக்கும்-இன்பினிட்டி பட இயக்குநர் பேட்டி

நடிகர் நட்ராஜன் நடித்துள்ள இன்பினிட்டி படத்தின் இயக்குநர் சாய் கார்த்திக் தனது அடுத்த படம் குறித்து பேசியுள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Jul 7, 2023, 07:47 PM IST
  • இன்பினிட்டி படத்தின் இயக்குநர் சாய் கார்த்திக்.
  • மர்டர் மிஸ்ட்ரி பாணியில் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
  • அடுத்த படம் குறித்து பேசியுள்ளார்.
என்னுடைய அடுத்த படம் வேறுமாதிரி இருக்கும்-இன்பினிட்டி பட இயக்குநர் பேட்டி title=

‘சதுரங்க வேட்டை’ பட புகழ் நட்ராஜன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம், இன்ஃபினிட்டி. இந்த படத்தை புதுமுக இயக்குநர் சாய் கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவிற்கு இன்பினிட்டி படம் மூலம் அறிமுகமாகியுள்ள இவர், தான் அடுத்து இயக்கவுள்ள படம் குறித்து இன்று நடைப்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். 

இன்பினிட்டி திரைப்படம்:

நடிகர் நட்டி (எ) நடராஜ் கதாநாயகனாகவும், நடிகை வித்யா பிரதீப் கதாநாயகியாகவும் நடித்து சாய் கார்த்திக் இயக்கத்தில தமிழக முழுவதும் இந்த திரைப்படம் இன்று வெளியிடப்பட்டது. படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றதை தொடர்ந்து இன்று ரிலீஸாகியுள்ள படத்திற்கும் ரசிகர்கள் நல்ல விமர்சனங்களை அளித்துள்ளனர். மர்டர்-மிஸ்ட்ரி வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் சாய் கார்த்திக் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். 

மேலும் படிக்க | வடிவேலு to சூரி-சிரிப்பு நடிகர்களாக இருந்து சீரியஸ் கேரக்டர்களாக மாறிய நகைச்சுவை நாயகர்கள்..!

பத்திரிகையாளர்கள் சந்திப்பு:

வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டில் உள்ள விஷ்ணு சினிமாஸ் தியேட்டரில் இன்பினிட்டி படம் திரையிடப்பட்டுள்ளது. இதனை பார்க்க படத்தின் இயக்குனர் சாய் கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர்கள் இன்று திரையரங்குக்கு  வந்திருந்தனர் அப்போது திரைப்பட இயக்குனர் செய்தியாளர்களிடம் கூறுகையில் 

“நான் வேலூர் அடுத்த மேலகுப்பம் கிராமத்தை சேர்ந்தவன். நான் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்ற வில்லை. என்னுடைய நீண்ட நாள் கனவு தற்போது நனவாகி இன்ஃபினிட்டி திரைப்படம் வெளியாகி உள்ளது. நான் சென்னைக்கு சென்று 13 ஆண்டுகள் ஆகிறது.  இதில் 5 ஆண்டுகளாக திரைப்படம் எடுக்க முயற்சித்து வந்தேன். கடந்த 2020 ஆம் ஆண்டு இன்ஃபினிட்டி திரைப்படம் தொடங்கப்பட்டு தற்போது வெளியாகி தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் 2ம் பாகம்  விரைவில் வெளிவர உள்ளது.  ஆசிரமங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை அரசுக்கு இந்த படம் சொல்கிறது. என்னுடைய அடுத்த படம் நகைச்சுவை கலந்த படமாக இருக்கும் இதற்கு விரைவில் பட பூஜை நடைபெற உள்ளது. நடிகர் அஜித், விஜய் ஆகியோர் நடிப்பதற்கு நான் கதை வைத்துள்ளேன். இப்போதுதான் முதல் படம் எடுத்துள்ளேன். காலம் நேரம் கூடி  அவர்களை வைத்து படம் இயக்குவேன்” என்று தெரிவித்தார். 

மேலும் படிக்க | தொடரும் தமிழக காவல் துறையினரின் தற்கொலைகள்..! என்ன காரணம்..? தீர்வு எப்போது..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News