தமிழ் திரையுலகில் அதிகம் பேசப்படும் காதல் ஜோடிகளில் யார் அதிகம் பேசப்படுகிறார்கள் தெரியுமா? நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி தான்.
விக்னேஷ் சிவன் (Vignesh Sivan) இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "நானும் ரவுடிதான்". இந்த திரைப்படத்தில் பணியாற்றிய போது இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். இவர்களது காதல் ஐந்து ஆண்டுகளாக தொடர்கிறது.
இயக்குனர் விக்னேஷ் சிவன், ஞாயிற்றுக்கிழமையன்று தனது இன்ஸ்டாகிராமில் லேடி சூப்பர் ஸ்டாரும், தனது இதயத்தை கவர்ந்த காதலியுமான நயன்தாராவுடன் (Nayanthara) இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார்.
விக்னேஷ் சிவன் எடுத்த அந்த செல்ஃபி புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இன்ஸ்ட்ராகிராமில் விக்னேஷ் சிவன் பதிவிட்ட புகைப்படம் ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பெற்றது. காதல் ஜோடியின் மீதான தங்கள் அன்பை ரசிகர்கள் அதில் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
தங்களது ரசிகர்களின் ஆர்வத்திற்கு தீனிப்போடும் வகையில் இருவரும் பல புகைப்படங்களை பகிர்ந்து வருக்கினறனர். கடந்த சில வருடங்களாகவே தீவிரமாக காதலித்து வரும் இந்த ஜோடி அடிக்கடி வெளிநாடு சென்று விதவிதமான, நெருக்கமான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
’காத்துவாக்கில ஒரு காதல்’ திரைப்படத்தில் சந்தோஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து பணிபுரிகின்றனர். தற்போது இருவரிடமும் இருக்கும் பட வேலைகள் முடிந்த பிறகு திருமணம் செய்துக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
Also Read | மனைவியாகும் நயன்தாரா.. ஆனால் கணவர் விக்னேஷ் சிவன் இல்லை..
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR