விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி, அழகு சாதன பொருட்கள் விற்கும் நிறுவனத்தை கடந்த ஆண்டு தொடங்கினர். இதன் மூலம் தொழில் முனைவோராக இருவரும் களம் இறங்கினர். இதனைத் தொடர்ந்து அவர்களது நிறுவனம் சானிட்டரி நாப்கினை பொருளை அறிமுகப்படுத்தினார் நயன்தாரா.
நயன்தாரா நிறுவனத்தின் சானிட்டரி நாப்கின் நல்ல விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றி விழாவில் நடிகை நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, “இது ரொம்ப சுயநலமா இல்லையானு சில பேர் கேப்பாங்க. இதில் சுயநலம் இருக்கு. ஆனால் அந்த சுயநலத்திற்கு பின்னாடி இருக்கிற பொதுநலம் தான் அதை நியாப்படுத்துகிறது. நாங்க சமூக அக்கறையோடு இருக்க வேண்டும் என நினைக்கிறோம். இது எல்லாருக்குமே ஒரு தொழில் தான். எல்லாருக்குமே பணம் வருகிறது, அது சந்தோஷமான விஷயம் தான்.
மேலும் படிக்க | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் 7 போட்டியாளர்! ரசிகர்கள் அதிர்ச்சி!
ஒவ்வொரு பெண்ணும், அவரவர் வீட்டில் இருக்கும் அப்பாவிடமோ, அண்ணனிடமோ காசு வேண்டும் என கேட்க தேவையில்லை. ஏனென்றால் உங்களுக்கு தேவையானதை நீங்களே பண்ணிக்கிறீங்க. அதற்கு ஒரு வாய்ப்பாக கோமதி மேடம் வழங்குகிறார். அவருடன் இணைந்து ஃபெமி 9 நடத்துவது ரொம்ப முக்கியமானது.
மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு, இன்னும் நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணிற்கும் போய் சேரவில்லை என நினைக்கிறேன். இதற்கு முன்னாடி எந்த சானிட்டரி நாப்கினுடைய பெயரையும் நாம் சொன்னது கிடையாது. ஆனால் இன்றைக்கு ஒரு மேடையில் இவ்ளோ ஆண்கள், நிறைய பெண்கள் இருக்கும் இடத்தில், அனைவரின் முன்னாடி சானிட்டரி நாப்கின் என்று சொல்றோம். அதுவே மிகப்பெரிய மாற்றம்.
ஃபெமி 9 நிறுவனத்தின் நோக்கமே மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் போய்ச் சேர வேண்டும். அதற்கு தேவையான சுகாதாரம் நிறைந்த சானிட்டரி நாப்கின் கொடுக்க வேண்டும்” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ