நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்... மூன்று பேருக்கு மட்டும்தான் அழைப்பா?

நயன்தாரா திருமணத்திற்கு மூன்று பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 29, 2022, 01:36 PM IST
  • நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்
  • மகாபலிபுரத்தில் நடக்கிறது திருமணம்
  • மூன்று பிரபலங்களுக்குத்தான் அழைப்பா
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்... மூன்று பேருக்கு மட்டும்தான் அழைப்பா? title=

வாழ்க்கையில் பல வலிகளை பார்த்தவர் நயன்தாரா. அவரது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து பலரால் விமர்சிக்கப்பட்டவரும்கூட. இருப்பினும் தன்னம்பிக்கையையும், உழைப்பையும் கைவிடாத அவர் தற்போது கோலிவுட் நாயகிகளில் நம்பர் 1.

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்துவரும் அவர் நடிகைகளிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.

Nayan

இதற்கிடையே அவர் நானும் ரெளடிதான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். பல வருடங்களாக காதலித்துவரும் இருவரும் ஒரே வீட்டில் இருந்துவருகின்றனர்.

அதுமட்டுமின்றி ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்தும், வெளியிட்டும்வருகின்றனர். இந்தச் சூழலில் நயன் - விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது என்ற கேள்வி எழுந்தது. 

ஒருவழியாக இருவருக்கும் ஜூன் முதல் வாரத்தில் திருப்பதியில் திருமணம் நடக்குமென கூறப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளில் இருவரும் மும்முரமாக இருக்கின்றனர்.

மேலும் படிக்க | ஷங்கர் இயக்கும் ராம் சரண் படத்தின் டைட்டில்! - தலைப்புக்கு இதுதான் ரீஸனா?!

ஆனால், திருப்பதியில் 150 பேர்வரை கலந்துகொள்ள கோயில் நிர்வாகம் அனுமதியளிக்காததால் அவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் நடக்கவிருக்கிறது என தகவல் வெளியானது.

மேலும் நயன் - விக்னேஷ் சிவனின் திருமண பத்திரிகை என்று ஒரு புகைப்படமும் வெளியாகி வைரலானது. அதில் மகாபலிபுரத்தில் ஜூன் 9ஆம் தேதி திருமணம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Invitation

இந்நிலையில் நயன் - விக்னேஷ் திருமணத்திற்கு மூன்றே மூன்று பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, விஜய் சேதுபதி, நெல்சன் திலீப்குமார், சமந்தா ஆகியோருக்கு மட்டும்தான் அழைப்பு விடுக்கப்படவிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | விக்ரம் பட ப்ரோமோஷன் - சூப்பர் ஸ்டாரை சந்தித்த உலக நாயகன்

அதேசமயம், விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பரான அனிருத்துக்கு எப்படி அழைப்பு செல்லாமல் இருக்கும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

மேலும், திருமணத்திற்கு குறைந்த அளவிலான நபர்களை அழைத்துவிட்டு வரவேற்புக்கு திரையுலக பிரபலங்களை அழைக்கலாம் என இருவரும் முடிவு செய்திருக்கிறார்கள் என கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்திருக்கிறது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News