நீயா நானா அப்பா-மகள் பாசம்.. சர்ச்சைக்குள்ளான விக்னேஷ் சிவனின் ட்வீட்!

நீயா நானா நிகழ்ச்சியில் லேட்டஸ்ட் எபிசோடில் நிகழ்ந்த அப்பா-மகளின் நெகிழ்ச்சியான சம்பவத்தை கண்டு மெய்சிலிர்த்து இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்வீட் செய்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Sep 14, 2022, 06:58 AM IST
  • கடந்த வார நீயா நானா நிகழ்ச்சி ட்ரெண்டிங் ஆனது.
  • அப்பா மகள் பற்றிய இந்த ஷோ அதிகம் பேசப்பட்டது.
  • பலரும் இதனை தங்களது சோசியல் மீடியாவில் சேர் செய்திருந்தனர்.
நீயா நானா அப்பா-மகள் பாசம்.. சர்ச்சைக்குள்ளான விக்னேஷ் சிவனின் ட்வீட்! title=

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கிட்டத்தட்ட 15 வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் நீயா நானா நிகழ்ச்சி பலதரப்பினருக்கும் பிடித்த ஒன்று, இந்நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.  கோட் போட்டாலே கோபிநாத் என்கிற அளவுக்கு இந்நிகழ்ச்சியின் இவர் அவ்வளவு ஃபேமஸ், இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு ஒவ்வொரு தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகிறது.  நீயா நானாவின் லேட்டஸ்ட் எபிசோடில் நடந்த அப்பா-மகள் பாசம் தற்போது பலரது டைம்லைன்களையும் ஆக்கிரமித்துள்ளது.  கணவனை விட தினம் சம்பாதிக்கும் மனைவிகள் என்கிற தலைப்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தனது கணவருக்கு படிக்க தெரியாது என மட்டம் தட்டிய மனைவியை தனது செயலால் கோபிநாத் பதிலடி கொடுத்த சம்பவம் சிறப்பாக இருந்தது.

மேலும் படிக்க | அனுஷ்காவிற்கு பிடித்த சீரியல் நடிகை இவர்தானாம்! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

தான் ஒரு சிறந்த நெறியாளர் என்பதை கோபிநாத் நிரூபித்துவிட்டதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  எப்போது நிகழ்ச்சியின் முடிவில் தான் சிறப்பாக பேசியவர்களுக்கு பரிசு கொடுப்பார்கள் ஆனால் கோபிநாத் அதிகமாக சம்பாதிப்பதால் மெத்தனத்தில் பேசிய பெண்ணுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரது கணவர் சீனி ராஜாவிற்கு நிகழ்ச்சியின் இடையிலேயே பரிசை வழங்கி அவரை பெருமைப்படுத்தினார்.  இதில் ஹைலைட் என்னவென்றால் சீனி ராஜாவின் மகள் அவரை விட்டு கொடுக்காமல் பேசியது தான், தந்தை மட்டுமல்ல மகள்களும் எந்த சூழ்நிலையிலும் தங்களது தந்தையை விட்டு கொடுக்கமாட்டார்கள் என்பதற்கு சான்றாய் இந்த சம்பவம் நடந்து தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்த சம்பவத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உணர்வுபூர்வமான கேப்ஷனையும் சேர்த்துள்ளார். அதில் தங்க மீன்கள் படத்தில் வரும் வசனம் ஒன்றை எழுதியுள்ளார், அவர் பதிவில் 'மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று' என்று பதிவிட்டிருந்தார்.  இந்த கேப்ஷனை கண்ட தமிழ் பித்தர்கள் பலர் 'முத்தம் காமத்தில் சேர்ந்தது' என்பது போன்ற தவறான அர்த்தத்தை புரிந்துகொண்ட விக்னேஷ் சிவனை வசைபாட தொடங்கினர்.  ஆனால் அவர் எழுதியிருந்தது 'காமத்தில் சேர்ந்ததில்லை' என்று தான், இதனை தவறாக புரிந்துகொண்ட சிலருக்கு விளக்கமும் தரப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க | பாதியில் நிறுத்தப்பட்டு மீண்டும் உருவான தமிழ் படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News