மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், வரி செலுத்தவில்லை என்பதால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள், மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. மகாராஷ்டிர மாநிலம், நாசிக் நகருக்கு அருகில் உள்ள சின்னார் மாவட்டத்தில் உள்ள நிலம் தொடர்பாக மகாராஷ்டிரா மாநில அரசு, ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு வரி நிலுவை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஐஸ்வர்யாவுக்கு சொந்தமான நிலம், விவசாயம் அல்லாத நிலம் என்று தெரியவந்துள்ளது.
வரி செலுத்தாதது தொடர்பாக நோட்டீஸ் கிடைத்ததாக தகவல் வந்துள்ளதை நடிகையில் தரப்பு இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், கிடைத்துள்ள தகவல்களின்படி, திருமதி ஐஸ்வர்யா ராய் பச்சன் இன்னும் இரண்டு நாட்களில் பணம் செலுத்துவார் என்று அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.
2023 ஜனவரி 9 தேதியிட்ட அறிவிப்பின்படி, சின்னார் மாவட்டத்தில் ஐஸ்வர்யா தனது சொத்துக்கு ரூ. 21,960 செலுத்த வேண்டும், இந்த வரித்தொகை நிலுவையில் உள்ளது. மாநில அரசுத்துறை அனுப்பியுள்ள நோட்டீஸில், நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், 10 நாட்களுக்குள் தொகையை செலுத்த வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலுவைத் தொகை தொடர்பாக நடிகை ஐஸ்வர்யாவைத் தவிர, 1200-க்கும் மேற்பட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, நிலுவை வரி பாக்கிகள், மார்ச் 31-ம் தேதி முடிவடையும் 2022-23 நிதியாண்டின் இறுதிக்குள் வசூலிக்கப்படும்.
ஆனால், நில வரியை செலுத்தாத குற்றத்திற்காக உலகப் புகழ் பெற்ற நடிகைக்கு வரி நோட்டீஸ் வந்துள்ள விவகாரம் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துவிட்டது.
பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகி, பொன்னியின் செல்வனின் நந்தினி, என பலராலும் அறியப்படும் ஐஸ்வர்யா ராய் பச்சன், நாசிக்கில் உள்ள அத்வாடி கிராமத்தில் உள்ள 1 ஹெக்டேர் நிலத்திற்கு ரூ.21,960 வரி செலுத்தாததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
“நடிகையின் சட்ட ஆலோசகர் இன்று எங்களைச் சந்தித்து வரி நாளைக்குள் செலுத்தப்படும் என்று எங்களிடம் கூறினார். அந்த நிலம் 2009-ல் வாங்கப்பட்டது. இத்தனை வருடங்கள் வரி கட்டியிருந்தாலும், இந்த குறிப்பிட்ட ஆண்டிற்கான வரி மட்டுமே நிலுவையில் உள்ளது,” என்று சின்னார் தாசில்தார் ஏக்நாத் பங்களா தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தில், வருவாய் மதிப்பீட்டு ஆண்டு, ஆகஸ்ட் முதல் தொடங்குகிறது, அவருக்கு இரண்டு முறை கோரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், ஆனால் எந்த பதிலும் இல்லை. எனவே, பத்து நாட்களுக்குள் வரி செலுத்துமாறு ஜனவரி 9 ஆம் தேதி, மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். எனவே தற்போது இன்னும் ஒரு நாளில் வரிசெலுத்துவதாக ஐஸ்வர்யா ராயின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து நடிகை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
மேலும் படிக்க | குறைந்த முதலீட்டில் SBI மூலம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்க வாய்ப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ