சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் தான் இடம்பெறாதது மிகுந்த வருத்தமளிப்பதாக பிரபல பாலிவுட் இயக்குநர் தெரிவித்துள்ளார்!
ஆரண்யகாண்டம் திரைப்படத்தை தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் மலையாள திரையுலக முன்னணி நடிகர் பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
After having seen the film , my regret to not be part of “Super Deluxe” has grown multi-folds.. KumarRaja is an unabashed , fearless filmmaker with so many tricks up his sleeves. I am not at liberty to say things but you just don’t see it coming..
— Anurag Kashyap (@anuragkashyap72) March 14, 2019
சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தநிலையில் படத்தைப் பார்த்த பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் "தான் இந்த படத்தில் இடம்பெறாதது பெரும் வருத்தம் அளிக்கின்றது" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... “சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் பார்த்தேன். கொண்டாடுவதற்கு படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. படத்தைப் பார்த்த நான் அந்தப் படத்தில் இடம்பெறவில்லையே என்று வருத்தப்பட வைத்துள்ளது. குமாரராஜா பயமற்ற, பல தந்திரங்களைக் கொண்ட இயக்குநர். சில விஷயங்களை சொல்ல எனக்கு உரிமை இல்லை. ஆனால் வரும்போது வெறுமனே பார்க்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின், நலன் குமாரசாமி ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். முன்னதாக இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுத அனுராக் காஷ்யப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் வரும் மார்ச் 29-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.