OTT தளத்தில் வெளியாகும் ஓ மணப்பெண்ணே; முழு விவரம் இங்கே

ஹரிஷ் கல்யான், ப்ரியா பவானிசங்கர் நடிப்பில் உருவான ஓ மணப்பெண்ணே திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 21, 2021, 02:02 PM IST
OTT தளத்தில் வெளியாகும் ஓ மணப்பெண்ணே; முழு விவரம் இங்கே title=

அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரிஷ் கல்யான் நடித்துள்ள படம் ஓ மணப்பெண்ணே. இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொன்டா நடிப்பில் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ‘பெல்லி சூப்புலு’ திரைப்படத்தின் ரீமேக்காக ஓ மணப்பெண்ணே (Oh Manapenne) படம் உருவாகியுள்ளது. தெலுங்கில் வெளியான இந்த திரைப்படத்தை தருண் பாஸ்கர் எழுதி இயக்கியிருந்தார். இதில் கதாநாயகியாக ரிது வர்மா நடித்திருந்தார். 

ALSO READ | ரஜினி - கமல் கெட்டப்பில் தெறிக்கவிடும் ஹரிஷ் கல்யாண்!

இதற்கிடையில் ஓ மணப்பெண்ணே திரைப்படத்தை கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கிருபாகரன் மேற்கொண்டுள்ளார். இத்திரைப்படத்தில் அஸ்வின் குமார், அன்புதாசன், வேணு அர்விந்த், அனிஷ் குருவில்லா உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் சமீபத்தில் ஓ மணப்பெண்ணே திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் தற்போது திரையரங்குகளில் தற்போது தொடர்ந்து படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வரும் நிலையில், ஓ மணப்பெண்ணே படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நாளைய தினம் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. 

 

ALSO READ | பிரியா பவானி சங்கர் மீது ஹரிஷ் கல்யாண் காதல்.. லவ் ட்வீட்டுக்கு பிரியாவின் ரியாக்‌ஷன் என்ன?

Trending News