ஒன்லி அன்ட் ஒன்லி ரஜினி-யால் மட்டுமே முடியும்!!

Last Updated : Jun 30, 2016, 12:51 PM IST
ஒன்லி அன்ட் ஒன்லி ரஜினி-யால் மட்டுமே முடியும்!! title=

பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஒரு தமிழ்ப் படத்துக்காக உலகெங்கும் ஏற்பட்டுள்ள எதிர்ப்பார்ப்பு, மெகா நிறுவனங்கள் முன் வந்து செய்யும் விளம்பரங்களைப் பார்க்கும்போது, இது நிஜம்தானா என்று கிள்ளிப் பார்த்துக் கொள்ளத் தோன்றுகிறது. ஆனால் நிஜம். ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. இதுவரை தமிழ்ப் படங்கள் பற்றிக் கேள்விப்படாத நாடுகள் கூட கபாலியை வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகின்றன

கபாலி படத்துக்காக ஏராளமான விமானப் பயணத் திட்டங்கள், பேக்கேஜ்களை அறிவித்துள்ள அந்த நிறுவனம், இப்போது கபாலி விமானங்களை இயக்கி வருகிறது. விமானத்தின் வெளிப்பாகம் முழுக்க ரஜினியின் உருவத்தை பிரமாண்டமாக வரைந்து, 'சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி' என்ற விளம்பரத்துடன் சர்வதேச அளவில் விமானங்களை இயக்குகிறது. முகப்புப் பகுதியில் ரஜினி உச்சரிக்கும் 'மகிழ்ச்சி' என்ற வார்த்தை ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள

குறிப்பாக சென்னையிலிருந்து மலேசியா மற்றும் மலேசியாவிலிருந்து உலகின் முக்கியப் பகுதிகளுக்குச் செல்லும் தங்கள் விமானங்களின் வெளிப்புறத்தை கபாலி ஸ்பெஷலாக மாற்றியுள்ளது உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இதுவரை உலகில் எந்த ஒரு நடிகர் அல்லது படத்துக்காகவும் இப்படி விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டதில்லை. அந்தப் பெருமை முதல் முறையாக ஒரு தமிழ் நடிகருக்கும் தமிழ்ப் படத்துக்கும் கிடைத்திருக்கிறது. ரஜினிகாந்த், கபாலி என்ற பெயருடன் உலகை வலம் வருகின்றன ஏர் ஏசியா விமானங்கள்.

 

 

 

 

 

Trending News