புரட்சியை உண்டாக்கிய தேசியவாதி - பாரதியாருக்கு பவன் கல்யாண் புகழாரம்!

புரட்சியை உண்டாக்கிய தேசியவாதி என்று பாரதியாருக்கு பவன் கல்யாண் புகழாரம் சூட்டியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 13, 2021, 07:03 PM IST
புரட்சியை உண்டாக்கிய தேசியவாதி - பாரதியாருக்கு பவன் கல்யாண் புகழாரம்!  title=

தேசிய ஒருமைப்பாட்டை கனவு கண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதியார் இன்று பாரதியாரின் நினைவு நாளையொட்டி பவன்கல்யாண் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எழுத்தையும் எழுச்சியையும் சமமாக நேசித்த தேசிய மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.  எழுத்துக்களை பெரும் சக்தியாக மாற்றி சமநிலை சமூகம் அமைத்து, மக்களிடம் புரட்சியை உண்டாக்கிய தேசியவாதி. ஆங்கிலேயர்களை விரட்டுவதற்கு முன்பு நம் சாதி, மதம், பிராந்தியம் மற்றும் பாலினம் ஆகியவற்றின் தடைகளை உடைக்கும் நோக்கத்துடன் பாரதி கவிதைகளும், கட்டுரைகளும் எழுதினார்.  அவர் இந்த சமூகத்திற்கு அளித்த எழுத்துக்கள் இன்று நம் கடமைகளை நினைவூட்டுகிறது.  

bharathiyar

தேசிய ஒருமைப்பாட்டை கனவு கண்ட மகாகவியின் நூறாம் ஆண்டு நினைவு ஆண்டு இது.  இத்தருணத்தில் அனைவரும் அந்த சமூக சீர்திருத்தவாதியை நினைவுகூர்ந்து கொள்வோம்.   அவருக்கு எனது ஜனசேனா கட்சி தரப்பிலும், எனது தரப்பிலும் அஞ்சலி செலுத்துகிறேன்.  நான் சென்னையில் இருந்த நாட்களில் எனது தமிழ் நண்பர்கள் பல சமயங்களில் சுப்பிரமணிய பாரதியார் கவிதைகளை பாடினார்.  புரட்சிகரமான அந்த வரிகள் மனித உறவுகளின் செழுமையை சொல்கிறது.  இவற்றில் எனக்கு மிகவும் பிடித்தமானது "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா, செல்வக் களஞ்சியமே" அந்த கவிதையில் பெண் குழந்தைகள் பற்றிய கவி வார்த்தைகள் மனதைத் தொட்டன.

கண்ணம்மா என தாய்க்கும், மண்ணிற்கும் மகுடம் சூட்டிய மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.  அவருடைய கவிதை நம் மூச்சில் இருக்கும் வரை அவர் அறியாதவர்.  சிந்து நதியின் மிசை நிலவினிலே என்று தேசிய ஒருமைப்பாடு குறித்து பாரதி பாடினார்.  இந்த கவிதையிலேயே அவர் சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து என்று சொல்லி, தெலுங்கு மொழி எவ்வளவு அழகாக இருக்கிறது என்று கூறுகிறார்.  நெருப்பு துகள்கள் போன்ற எழுத்துக்களுடன் ஊக்குவிக்கும் சொற்களுடன் பாரதியார் வழங்கிய படைப்புகள் நமக்கு மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும் விலை மதிப்பற்ற சொத்து ஆகும்.  எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாக போற்றி வருது நல்ல விஷயம்.  ஒரு எழுத்தறிவு ஞானிக்கு தமிழ் மொழிப் பற்று உள்ள ஆட்சியாளர்கள் கொடுக்கும் மரியாதை இது" இன்று பாரதியாரின் புகழை ஜனசேனா கட்சியின் தலைவர் பவன்கல்யாண் கூறியிருந்தார்.

house

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News