கடவுள் எதிர்ப்பா பெரியார் கொள்கை? வைரலாகும் ஜீ தமிழ் நிகழ்ச்சி

ஜீ தமிழ் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் பெரியார் ஏன் கடவுளை எதிர்த்தார்? என சிறுவர்கள் நடித்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 20, 2022, 01:40 PM IST
  • ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்’
  • பெரியார் வேடத்தில் நடிக்கும் சிறுவர்கள்
  • பெரியார் கடவுளை ஏன் எதிர்த்தார்? என விளக்கம்
கடவுள் எதிர்ப்பா பெரியார் கொள்கை? வைரலாகும் ஜீ தமிழ் நிகழ்ச்சி title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற சிறுவர்களுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நடிகை சினேகா, சம்யுக்தா மற்றும் மிர்ச்சி செந்தில் ஆகியோர் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சி அண்மையில் சர்ச்சையில் சிக்கியது. புலிகேசி கெட்டப்பில் நாட்டு நடப்புகளை விமர்சிக்கும் வகையில் சிறுவர்களின் ஸ்கிரிப்ட் இருந்தது. இதனைப் பார்த்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தியதாக ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

மேலும் படிக்க | இந்தோனேஷிய மொழியில் ரீமேக்காகும் முதல் தமிழ் படம்!

மேலும், மத்திய தகவல் தொழில்நுட்ப துறையிடம் புகார் அளித்து தொலைக்காட்சிக்கு நோட்டீஸூம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், இந்த வாரம் பெரியார் கெட்டப்பில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் சிறுவர்கள் ஃபர்மாமென்ஸ் செய்கின்றனர். அதில் பெரியார் கான்செப்டை கையில் எடுத்திருக்கும் சிறுவர்கள், பெரியார் ஏன் கடவுளை எதிர்த்தார்? கடவுள் மறுப்பு அவரது கொள்கையா? மததத்தை தூக்கியெறியச் சொல்லியது ஏன்? என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக அவர்களின் பர்மாமென்ஸ் உள்ளது.

பெரியார் வேடமணிந்திருக்கும் சிறுவன், " கடவுள் மறுப்பு என்பது என்னுடைய கொள்கையே இல்லை. எல்லோரையும் சமமா நடத்தனும்ங்கிறது மட்டும் தான் என்னோட எண்ணம்" போன்ற வசனங்களால் பெரியாரின் கொள்கைகளை எடுத்துரைக்கிறார். அதேபோல், சிறுமி ஒருவரும் பெண் அடிமைத் தனத்தை ஒழிக்க பெரியார் முன்னெடுத்த போராட்டம் பற்றி பேசுகிறார். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மேலும் படிக்க | BB Ultimate: பிக்பாஸ் கமலஹாசன் அல்டிமேட்டில் இருந்து விலகுவது ஏன்? உறுதியான விலகல்! ரசிகர்கள் ஏமாற்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News