காவலராக களமிறங்கும் பிரபுதேவா; படத்தின் பெயர் என்ன?

நடிகர் பிரபு தேவா காவல்துறை அதிகாரியாக நடிக்கும் திரைப்படத்தின் பெயர் வெளியானது!

Last Updated : Jul 19, 2018, 11:28 AM IST
காவலராக களமிறங்கும் பிரபுதேவா; படத்தின் பெயர் என்ன? title=

நடிகர் பிரபு தேவா காவல்துறை அதிகாரியாக நடிக்கும் திரைப்படத்தின் பெயர் வெளியானது!

காக்கி உடையில் திரையில் வளம் வர வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகரின் கனவாகும். காக்கி உடையில் நடித்து தங்களுக்கென ஒரு தனி பெயரினை பெற்றவர்கள் பட்டியலில் நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விக்ரம், சூர்யா போன்றவரை கூறலாம்.

இந்த வரிசையில் தற்போது நடிகர் பிரபுதேவாவும் இணையவுள்ளார். நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முக தன்மையுடன் திரையுலகை கலக்கிவரும் நடிகர் பிரபுதேவா-வின் மெர்குரி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்ததாக இயக்குனர் AC முகில் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். இவர் நடிகர் பிரபு தேவா இயக்கத்தில் வெளியான போக்கிரி, வில்லு போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக டிக்டிக்டிக் படத்தில் நடித்த நிவேதா பெத்துராஜ் நடிக்கவுள்ளார். 

பொன் மாணிக்கவேல் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பெயர் பலகையினை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

Trending News