லீக்கான படுக்கையறை காட்சி... வீடியோ குறித்து ராதிகா ஆப்தே கேள்வி..

படுக்கையறை காட்சியில் நான் மட்டும் அல்ல தேவ் என்னுடன் இருக்கிறார் அதை பற்றி ஏன் யாரும் பேசவில்லை என ராதிகா ஆப்தே கேள்வி..

Updated: Jul 20, 2019, 03:09 PM IST
லீக்கான படுக்கையறை காட்சி... வீடியோ குறித்து ராதிகா ஆப்தே கேள்வி..
Pic Courtesy : Radhika Apte Instagram

படுக்கையறை காட்சியில் நான் மட்டும் அல்ல தேவ் என்னுடன் இருக்கிறார் அதை பற்றி ஏன் யாரும் பேசவில்லை என ராதிகா ஆப்தே கேள்வி..

தமில் திரையுலகிற்கு கபாலி திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர், ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் தவிர ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் இவர் ஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோ தேவ் படேலுடன் இணைந்து   'தி வெட்டிங் கெஸ்ட்' என்ற படத்தில் நடித்துள்ளார். 

இந்தப் படத்தில் தேவ் படேல், ராதிகா ஆப்தே நடித்திருக்கும் படுக்கையறை காட்சி இணையத்தில் கசிந்து வைரலாகியது. வலைதளங்களில் வெளியான படுக்கையறை காட்சி குறித்து ராதிகா ஆப்டே, ‘தி வெட்டிங் கெஸ்ட் படத்தில் நிறைய அழகான காட்சிகள் இருக்கிறது. அந்த குறிப்பிட்ட பாலியல் காட்சி கசிந்து வைரலானது சமூகத்தின் மனநிலையை அப்பட்டமாக காட்டுகிறது. அந்தக் காட்சியில் நானும் தேவ் பட்டேலும் இருக்கிறோம். ஆனால், அதை பகிரும் போது என்னுடைய பெயரை பயன்படுத்தி பகிர்கின்றனர். ஏன் தேவ் பட்டேல் பெயரை பயன்படுத்தவில்லை’ என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் ‘நான் உலக சினிமாக்களை பார்த்து வளர்ந்தவள். நிறைய இடங்களுக்கு பயணம் செய்துள்ளேன். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மக்கள் மேடையில் நிர்வாணமாக நடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய உடலை நான் மிகவும் விரும்புகிறேன்.

நான் ஏன் என் உடலைப் பற்றி வெட்கப்பட வேண்டும். ஒரு நடிகையாக நான் பயன்படுத்தும் ஒரு கருவி தான் என் உடல். இது மாதிரியான காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்த அச்சமும் இல்லை. நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் ராதிகா ஆப்டே கூறியுள்ளார்.