பாகுபலி இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர் (RRR). ராம் சரண், ஜுனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த திரைப்படம் சுமார் 400 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜனவரி 7 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு, இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக புரோமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன.
ALSO READ | தளபதி விஜயின் ’Beast’ வெளியீட்டு தேதி அறிவிப்பு...!
சென்னையிலும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது. இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருடன் தமிழ் பிரபலங்களான சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால், இந்த படம் திட்டமிட்டப்படி ரிலீஸ் ஆகுமா? என்ற கேள்வி எழுந்தது.
ஏனென்றால், நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மக்கள் கூடுவதை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், திரையரங்குகளில் 50 விழுக்காடு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் அறிவிக்கப்பட்டது. இத்தகைய இக்கட்டான சூழல்நிலையில் பெரிய பட்ஜெட் படமான ஆர்.ஆர்.ஆர் (RRR) ரிலீஸ் ஆனால், அது வசூலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என கருதிய படக்குழு, ரிலீஸ் தேதியை தற்காலிகமாக ஒத்திவைத்தது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியிருந்த படக்குழு இப்போது, ஆர்.ஆர்.ஆர் ரிலீஸ் தேதி வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 18 ஆம் தேதி அல்லது ஏப்ரல் 28 ஆம் தேதி கட்டாயம் ரிலீஸாகும் எனக் கூறியுள்ளது. ஆனால், இரு தேதிகளில் எந்த தேதி கன்ஃபார்ம் என்பதை படக்குழு விரைவில் வெளியிடும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR