தலைவர் 169... பர்ஸ்ட் லுக், ரிலீஸ் தேதி எப்போது?

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 17, 2022, 04:25 PM IST
  • தலைவர் 169 படத்தின் அப்டேட்
  • ஜூலையில் ஆரம்பிக்கிறது ஷூட்டிங்
  • ரஜினி பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக்
தலைவர் 169... பர்ஸ்ட் லுக், ரிலீஸ் தேதி எப்போது? title=

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தைப் பெற்றது. 

கேஜிஎஃப் 2வைவிட பீஸ்ட் வசூலில் சக்கைப்போடு போடும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் பீஸ்ட்டை கேஜிஎஃப் 2 சர்வசாதாரணமாக வசூலில் கடந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி பீஸ்ட் படத்தில் லாஜிக்கே இல்லை என விமர்சனம் எழுந்த சூழலில் நேற்றிலிருந்து பீஸ்ட் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் தேசிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டன.

Beast

இந்தச் சூழலில் பீஸ்ட் படம் நடந்துகொண்டிருக்கும்போதே நெல்சன் ரஜினியை வைத்து அடுத்தப் படத்தை இயக்குவார் என சன் பிக்சர்ஸ் அறிவித்தது. 

இப்படத்துக்கும் அனிருத்தே இசையமைக்கிறார். மேலும் ப்ரியங்கா அருள்மோகன், ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருப்பதாகவும், ஐஸ்வர்யா ராய் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்பட்டது.

மேலும் படிக்க | ராம் சரணுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்? - விஜய் படம் கைவிடப்படுகிறதா?!

இதற்கிடையே பீஸ்ட் கொடுத்த அடியால் பயந்துபோன சன் பிக்சர்ஸ் நெல்சனுக்கு பதில் வேறு யாரையாவது ரஜினி படத்தை ஆரம்பிக்க திட்டமிட்டதாக தகவல்கள் பறந்தன. ஆனால், ரஜினி படத்தின் அடுத்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார்தான் என உறுதியாகியுள்ளது.

Rajini, Nelson

இந்நிலையில், ஜூலை மாதம் படப்பிடிப்பை தொடங்கி டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளன்று படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட நெல்சன் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. 

மேலும் படத்தை அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு வெளியிடவும் படக்குழு முடிவு செய்திருக்கிறதாம். தற்போது வெளியாகியிருக்கும் இந்தத் தகவலால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | அப்டேட் கேட்ட ரசிகர்கள்- சர்ப்ரைஸ் ட்ரீட் வைத்த ‘சலார்’ படக்குழு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Trending News