காஜல் அகர்வாலுக்கு No சொன்ன ராம்சரண் - வெளியான டாப் சீக்ரெட்

காஜல் அகர்வாலுக்கு ராம் சரண் நோ சொன்ன சீக்ரெட் இப்போது தெரியவந்திருக்கிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 3, 2022, 01:46 PM IST
  • காஜல் அகர்வாலுக்கு நோ சொன்ன ராம்சரண்
  • லேட்டஸ்ட்டாக வெளியாகியிருக்கும் புது தகவல்
  • காஜல் கணவருடன் மும்பையில் வசித்து வருகிறார்
காஜல் அகர்வாலுக்கு No சொன்ன ராம்சரண் - வெளியான டாப் சீக்ரெட் title=

திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த காஜல் அகர்வால், திருமணமான பிறகு குடும்பத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தாய்மை அடைந்திருக்கும் அவருக்கு இன்னும் சில மாதங்களில் முதல் குழந்தை பிறக்க உள்ளது. தாய்மை அடைந்திருந்தாலும், அவரால் கேமராவை விட்டு விலகியிருக்க முடியவில்லை. இதனால், கர்ப்ப காலத்தில் விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி கலர்கலரான புகைப்படங்களை ரிலீஸ் செய்து வருகிறார். இந்தநிலையில், அவர் நடித்திருக்கும் ஆச்சார்யா திரைப்படம் இம்மாதம் 29 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. 

மேலும் படிக்க | ’ஹிந்தி கற்றுக்கொண்டேன்’ பாலிவுட் என்டிரிக்கு தயார் - கேஜிஎப் ஹீரோ

ராம்சரண் மற்றும் சிரஞ்சீவி நடித்திருக்கும் இந்தப் படத்தில் லீட் ரோலில் நடித்திருக்கும் காஜல், படம் விளம்பர பணிகளில் கலந்து கொள்ளவும் விருப்பம் தெரிவித்துள்ளார். 3 வாரங்களில் படம் ரிலீஸாக இருப்பதால் ராம் சரணம் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் பிஸியாக புரோமோஷன் பணிகளில் இறங்கியுள்ளனர். இவ்வளவு நாள் ஆர்ஆர்ஆர் திரைப்படத்துக்கான புரோமோஷனில் இருந்த ராம் சரண், அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தந்தையுடன் நடித்த படத்தின் புரோமோஷனில் பிஸியாகியுள்ளார். 

இதனைக் கேள்விப்பட்ட காஜல் மும்பையில் இருந்து ஹைதராபாத் வர விருப்பம் தெரிவித்துள்ளார். படத்திற்காக 2 அல்லது மூன்று பிரத்யேக நேர்காணல்களிலும் அவர் பங்கேற்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஆனால், காஜல் தாய்மை அடைந்து, வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ராம் சரண் அவரின் விருப்பத்தை நிராகரித்துவிட்டாராம். இந்த நேரத்தில் நீங்கள் இவ்வளவு பெரிய ரிஸ்க் எல்லாம் எடுக்கக்கூடாது எனக் கூறிய ராம்சரண், பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். 

இப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருப்பதால், அவர் பட புரோமோஷன்களில் பங்கேற்க இருக்கிறார். அதேநேரத்தில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ராம் சரண் 15 படத்திலும் ராம் சரண் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம். 

மேலும் படிக்க | மும்பையில் வீடு வாங்கும் சமந்தா! விலை இதனை கோடியா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News