ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே விவகாரத்தா?

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளாக நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனே விவாகரத்து செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 3, 2022, 09:12 AM IST
  • ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனே 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
  • இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர்.
  • கோலாகலமாக இவர்களது திருமணம் நடைபெற்றது.
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே விவகாரத்தா?

சமீப காலமாகவே திரை பிரபலங்கள் பலரும் விவாகரத்து பெற்று வருவது தொடர்கதையாக ஒன்றாக இருந்து வருகிறது.  அந்த வகையில் தற்போது பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகிய இருவரும் விவாகரத்து பெற போவதாக செய்திகள் பரவி திரையுலகினரிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனே ஆகிய இருவரும் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு இருவரும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.  அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக தீபிகா படுகோனே இருந்து வருகிறார், இந்த இரண்டு பிரபலங்களும் தற்போது பிஸியாக இருந்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ‘தல’ பெயரை கேட்டவுடனே டென்ஷன் ஆன விஜய் சேதுபதி; லயோலா கல்லூரியில் சம்பவம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரன்வீர் சிங் நடத்திய போட்டோஷூட் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது, இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.  தற்போது தீபிகா படுகோனே, பிரபாஸுடன் இணைந்து நடித்து வருகிறார், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இவரது உடல்நிலை மோசமாக போனதற்கு காரணமா மன அழுத்தம் தான் சிலர் கூறுகின்றனர், அதாவது சில மாதங்களாகவே ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகிய இருவரும் மண வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லையென்றும் அதனால் தான் தீபிகாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

rs

இந்நிலையில் இந்த நட்சத்திர தம்பதியார் விவாகரத்து செய்ய முடிவடுத்து இருப்பதாகவும் தகவல்கள் தீயாக பரவி வருகிறது.  இவர்களின் விவாகரத்து குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்த போதிலும் இதுவரை இருவரும் இதுபற்றி எதுவும் கூறவில்லை.  இந்நிலையில் சமீபத்தில் ரன்வீர் சிங் பிங்க் நிற உடையணிந்து ஒரு புகைப்படத்தை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி இருந்தார், அந்த புகைப்படத்திற்கு தீபிகா 'எடிபிள்' என்று கமெண்ட் செய்துள்ளார் அதற்கு பதிலளிக்கும் விதமாக ரன்வீர் முத்த எமோஜி ஒன்றை பதில் கமெண்ட் செய்துள்ளார்.  இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்து இருக்கின்றனர்.

மேலும் படிக்க | விஜய் தேவரகொண்டாவை காதலிக்கிறேனா? ராஷ்மிகாவின் அசத்தலான பதில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News