STR நடித்த கோ திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் வைரல்

தற்போது கோ படத்தில் நடிகர் சிம்பு நடித்த காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு Rs 1 கோடி கொடுத்த நடிகர் சிவக்குமாரின் குடும்பம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 13, 2021, 09:41 AM IST
  • கோ படத்தில் நடிகர் சிம்பு நடித்த காட்சிகளின் புகைப்படங்கள் வைரல்
  • கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது கோ
  • கே.வி.ஆனந்தின் அடுத்த திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக சிம்பு உருக்கம்
STR நடித்த கோ திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் வைரல்

சென்னை: வெற்றி பெற்ற தமிழ் திரைப்படங்களில் ஒன்று ‘கோ’. நடிகர் ஜீவா, நடிகை கார்த்திகா நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் முதலில் சிம்பு நடிப்பதாக இருந்தார். சில காட்சிகளும் படமாக்கப்பட்ட பின் சிம்பு அந்த படத்தில் இருந்து விலகினார். நடிகர் ஜீவாவை கதாநாயகனாக்கி திரைப்படம் வெளியானது.

அண்மையில் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் சமீபத்தில் காலமானார். அப்போது அவருக்கு இரங்கல் தெரிவித்த நடிகர் சிம்பு, கோ படத்தில் முதலில் நான் தான் நடிக்க இருந்தேன். ஆனால், சில பல காரணங்களுக்காக தன்னால் நடிக்க முடியவில்லை என பதிவிட்டு இருந்தார். 

Also Read | சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் அப்டேட், தயாரிப்பாளர் அறிக்கை!

தற்போது கோ படத்தில் நடிகர் சிம்பு நடித்த காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.   

கே.வி. ஆனந்துக்கு வெளியிட்ட இரங்கல் தெரிவித்திருந்த சிம்பு, அவரது அடுத்த படத்தில் இணைந்து பணியாற்ற இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருந்த நிலையில் துரதிருஷ்டவசமாக அவர் காலமாகி விட்டார் என கண்ணீர் மல்க சிம்பு அஞ்சலி தெரிவித்திருந்தார்.

தற்போது சமூக வலைதளங்களில் கோ படத்தில் சிம்பு நடித்த காட்சிகள் அடங்கிய பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. நடிகர் அஜ்மல் மற்றும் கதாநாயகி கார்த்திகாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Also Read | முதலமைச்சர் நிவாரண நிதிக்கு Rs 1 கோடி கொடுத்த நடிகர் சிவக்குமாரின் குடும்பம் 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News