ரெமோ : ஃபஸ்ட் லுக்

Last Updated : Jun 24, 2016, 12:36 PM IST
ரெமோ : ஃபஸ்ட் லுக் title=

ஏ-24 ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ரேமோ. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்திலும் நடிக்கிறார். அவரது முதல் தோற்றத்தை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக்கை நேற்று இரவு டைரக்டர் ஷங்கர் வெளியிட்டார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ கெட்டப்தான முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெண் வேடத்தில் அவர் நடித்திருக்கும் நர்ஸ் அக்கா கெட்டப் பர்ஸ்ட் லுக்காக வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ஒரு நிஜ பெண் போலவே இருக்கிறார். இப்பட விழாவில் இயக்குனர் ஷங்கர், சதீஷ் மற்றும் படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். 

விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:-ரெமோ படத்தின் கதை எனக்கு பிடித்தது. ஆனால் இதில் பெண் வேடம் போட்டு நடிப்பதுதான் கஷ்டமாக இருந்ததுபெண் வேடத்தில் வெளியே வருவதற்கு தயக்கமாக இருந்தது. அந்த மேக்கப்பில் நடிக்க மிகவும் சிரமப்பட்டேன். படப்பிடிப்பை பார்க்க வந்த பலருக்கு பெண் வேடத்தில் இருப்பது நான்தான் என்று தெரியவில்லை. இந்த படம் உருவாக முக்கிய காரணம் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா ஒருவர் தான். இந்த படத்துக்காக 1௦ மாதம் எனக்காக இயக்குனர் காத்திருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News