சென்னை: தமிழகத்தில் தேர்தல் களம் கோடை வெயிலை விட அதிகமாக தகிக்கிறது. தேர்தலுக்கு 3 நாட்களே உள்ள நிலையில் வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. அண்ணாநகர் திமுக வேட்பாளர் மகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றும் வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாநகரில் திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Also Read | மு.க. ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை: தேர்தல் நேரத்து திருவிளையாடலா?
சபரீசன் மற்றும் அவரது நெருக்கமானவர்களுக்கு சொந்தமான சென்னையில் நான்கு இடங்களில் காலை 8 மணியளவில் வருமானவரித் துறையின் சோதனைகள் தொடங்கின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் திமுக ஈடுபட்டுள்ளது. அதோடு, வருமான வரித் துறையினர் "அதிகார துஷ்பிரயோகம்" செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் அளித்துள்ளது.
பல இடங்களில் சோதனைகள் நடைபெறும் நிலையில், சென்னை புறநகர் பகுதியில் உள்ல நீலங்கரை என்ற இடத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தமரை, தனது கணவர் சபரீசனுடன் வசிக்கிறார். தேர்தல் பிரச்சாரம் தொடர்பான பணப் பரிமாற்றங்கள் செந்தாமரையின் வீட்டில் இருந்து நடப்பதாக வருமான வரித்துறை கருதுகிறது.
ஸ்டாலினின் மருமகன் சபரீசன், திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
தமிழக தேர்தல்களில். ஆளும் அதிமுக கட்சிக்கும், எதிர்கட்சி திமுகவுக்கும் கடும்போட்டி நிலவும் நிலையில் ஸ்டாலினின் வலது கையாக செயல்படுபவர், அவரது மருமகன் சபரீசன் என்று கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியினர் செய்யும் அராஜகத்திற்கு, ஏப்ரல் 6 ம் தேதி மக்கள்தெளிவான தீர்ப்பை வழங்குவார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.
"மோடி தலைமையில் அதிகாரிகள் கூட்டம்போட்டு, கலந்தாலோசித்து திமுகவை மிரட்டி, அச்சுறுத்த சோதனை நடத்தியுள்ளனர்;
இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம், அஞ்சமாட்டோம், கவலைப்படமாட்டோம்"
- கழக தலைவர் @mkstalin அவர்கள் உரை.
Link: https://t.co/ysFfaXx5id#VoteForDMK #VoteForDMKalliance pic.twitter.com/IqeW9lMkxR
— DMK (@arivalayam) April 2, 2021
தனது மகளின் வீட்டில் நடந்த தேடல்கள் தொடர்பாக பேசிய ஸ்டாலின், "நான் எம்.கே. ஸ்டாலின். இந்த ஸ்டாலின் அவசரநிலை மற்றும் மிசாவை எதிர்கொண்டார். இந்த ஐ.டி ரெய்டுகள் எனக்கு அச்சத்தைக் கொடுக்காது. அஞ்சி தலைவணங்க நாங்கள் அதிமுக தலைவர்கள் அல்ல என்பதை பிரதமர் மோடி அறிந்து கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
வருமான வரிச் சோதனை பற்றி காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுகவின் துரைமுருகன் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
"தேர்தல் நேரத்தில் திமுகவினர் மீது வருமானவரித்துறையை ஏவிவிட்டிருப்பது பாஜக அரசு போடும் தப்புக்கணக்கு"
- கழக பொதுச்செயலாளர் திரு. @katpadidmk MLA அவர்கள் பேட்டி.#DMK #TNElections2021 pic.twitter.com/MVVqX7eL0l
— DMK (@arivalayam) April 2, 2021
திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள செய்தியில், "வருகிற சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென்ற நோக்கத்தின் இறுதியாக, கடைசி ஆயுதமாக வருமான வரித்துறையை பா.ஜ.க. பயன்படுத்தி வருகிறது. தி.மு. கழக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் மருமகன் சபரீசன், அண்ணாநகர் தி.மு.க. வேட்பாளர் திரு. எம்.கே. மோகனின் மகன் கார்த்தியின் வீட்டில் வருமானவரித்துறை தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென்ற நோக்கத்தின் இறுதியாக, கடைசி ஆயுதமாக வருமான வரித்துறையை பா.ஜ.க. பயன்படுத்தி வருகிறது. தி.மு. கழக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் மருமகன் சபரீசன், அண்ணாநகர் தி.மு.க. வேட்பாளர் திரு. எம்.கே. மோகன், pic.twitter.com/6SE7Nv6qft
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) April 2, 2021
எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது, அன்றய காங்கிரஸ் அரசாங்கம் அரசியல்வாதிகளைத் தகர்த்தெறிய பயன்படுத்திய அவசரநிலை சட்டம் தொடர்பாக இன்றைய காங்கிரஸின் கூட்டாளியான திமுக தலைவர் குறிப்பிட்டிருக்கிறார் என்பதும் நகைமுரணாகவே இருக்கிறது.
ALSO READ: வாடிக்கையாகிவிட்ட தேர்தல் வேடிக்கைகள்: சூடுபிடிக்கும் தேர்தல் களத்தின் சில சுவாரசியங்கள்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR