2022ல் இதுவரை பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளிய படங்கள்!

Best Box Office Collection Movies In 2022: இந்த வருடம் வெளியான திரைப்படங்கள் சில பாக்ஸ் ஆபிசில் அதிக வசூலை பெற்றுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 23, 2022, 05:28 PM IST
  • தமிழகத்தில் வேற்று மொழி படங்கள் வசூல் சாதனை செய்துள்ளது.
  • இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஆர்ஆர்ஆர் படம் நல்ல வசூல் செய்திருந்தது.
  • தற்போது விக்ரம் படம் தமிழகத்தில் சாதனை புரிந்து வருகிறது.
2022ல் இதுவரை பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளிய படங்கள்! title=

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான 'ஆர்ஆர்ஆர்' படம் உலகளவில் ரூ.1131.1 கோடி வசூல் செய்துள்ளது.  இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.425 கோடி ஆகும்.  இந்த வரலாற்று திரைப்படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஒலிவியா மோரிஸ் போன்ற பலர் நடித்துள்ளனர்.  லோகேஷ் இயக்கத்தில் கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோரது நடிப்பில் வெளியான 'விக்ரம்' படம் ரூ.240.3 கோடி வசூல் செய்தது, இப்படத்தின் மொத்த பட்ஜெட் தொகை ரூ.115 கோடியாகும்.  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இது உலகளவில் ரூ.227.3 கோடி வசூல் செய்துள்ளது.  இதன் மொத்த பட்ஜெட் 130 கோடி ரூபாயாகும்.  

மேலும் படிக்க | விஜய்யுடன் புதிய படத்தில் இணையும் சிறுத்தை சிவா!

'கேஜிஎப்' முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தாண்டு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான 'கேஜிஎப் 2' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்று உலகளவில் 1228.3கோடி ருபாய் வசூல் செய்துள்ளது.  இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 150 கோடி ரூபாயாகும்.  சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட் நடிப்பில் இந்தாண்டு வெளியான 'கங்குபாய் காத்தியவாடி' படம் நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் 194.8 கோடி ருபாய் வசூல் செய்தது.  இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 125 கோடி ரூபாயாகும்.  பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரது நடிப்பில் வெளியான 'சர்க்காரு வாரி பாடா' படம் உலகளவில் 191.8 கோடி ருபாய் வசூல் செய்திருந்தது.  இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 125 கோடி ரூபாயாகும்.  

Valimai

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் இந்தாண்டு வெளியான 'வலிமை' படம் நல்ல வரவேற்பை பெற்று உலகளவில்  163.2 கோடி ருபாய் வசூல் செய்திருந்தது.  இப்படத்தின் மொத்த பட்ஜெட் 125 கோடி ரூபாயாகும்.  ரூ.40 கோடி பட்ஜெட் செலவில் உருவாக்கப்பட்ட 'டான்' படம் உலகளவில் 120.6 கோடி ருபாய் வசூல் செய்துள்ளது.  20 கோடி ருபாய் செலவில் உருவாக்கப்பட்ட காஷ்மீர் பைல்ஸ் படம் 337 கோடி ருபாய் வசூல் செய்துள்ளது.  105 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட 'பீம்லா நாயக்' படம் உலகளவில்  161.3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.   

radheshyam

250 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட 'ராதே ஷியாம்' படம் உலகளவில் 148.4 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.  50 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட  'பீஷ்ம பர்வம்' படம் உலகளவில் 87 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.   40 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட 'F3' படம் உலகளவில் 91.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.  30 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட 'ஜேம்ஸ்' படம் உலகளவில் 79.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.  75 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட 'பூல் புலையா' படம் 210.9 கோடி ரூபாய் வசூல் செய்தது.

மேலும் படிக்க | எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விஜய்- 66 படத்தின் டைட்டில் இதுவா?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News