சபாஷ் நாயுடு: கமலின் கெட்டப்!!

Last Updated : Jun 28, 2016, 01:29 PM IST
சபாஷ் நாயுடு: கமலின் கெட்டப்!! title=

'சபாஷ் நாயுடு' படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை நடிகர் மாதவன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட, இணையத்தில் அது வைரலாகி வருகிறது. 'சபாஷ் நாயுடு'. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

படத்தின் இயக்குநர் ராஜீவ் குமாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கமலே இயக்குநர் பொறுப்பை ஏற்று இப்படத்தை எடுத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் லாஸ் ஏஞ்செல்ஸ் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக கமல் தெரிவித்திருக்கிறார். இதில் கமலுக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கின்றனர்.

இந்நிலையில் 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை நடிகர் மாதவன் வெளியிட்டிருக்கிறார். இணையத்தில் கமலின் புதிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

 

Trending News