நடிகைகளின் சம்பளம்: சமந்தாவுக்கு எத்தனையாவது இடம்னு தெரியுமா?

தென் இந்திய சினிமாவில் சம்பள அடிப்படையில் நடிகை சமந்தாவுக்கு எத்தனையாவது இடம் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Mar 10, 2022, 02:09 PM IST
  • திருமணத்தால் சமந்தாவின் மார்க்கெட் குறையவில்லை
  • தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்துவருகிறார் சமந்தா
  • நடிகைகளின் சம்பளத் தகவல் வெளியாகியுள்ளது
நடிகைகளின் சம்பளம்: சமந்தாவுக்கு எத்தனையாவது இடம்னு தெரியுமா? title=

தென் இந்திய சினிமாவில் சம்பள அடிப்படையில் நடிகை சமந்தாவுக்கு எத்தனையாவது இடம் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில், பாணா காத்தாடி படம் வாயிலாக அறிமுகம் ஆன நடிகை சமந்தாவுக்கு திரையுலகில் இது 12ஆவது வருடம். தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்ட அவர், சீனியர் ஜூனியர் என அனைத்துத் தரப்பு நடிகர்களுடனும் நடித்துவருகிறார். திருமணத்துக்குப் பின் பெரும்பாலான நடிகைகள் தங்களது நடிப்பைத் தொடருவதில்லை; அப்படியே தொடர்ந்தாலும் அவர்களுக்கு முன்பிருந்த மார்க்கெட் இருப்பது இல்லை. இதன் காரணமாகவே பல முன்னணி நடிகைகள் தங்களது திருமணத்தைத் தள்ளிப்போடுவதாகவும்கூட சொல்லப்படுவதுண்டு.

                                               Samantha-Photo

ஆனால், இந்த நடைமுறை சமீபகாலமாக உடைபட்டுவருகிறது. இதை உடைத்தவர்களுள் தமிழில் முக்கியமான ஒரு நடிகையாக சமந்தாவைக் குறிப்பிடலாம். தனது திருமணத்துக்குப் பின்னும் வழக்கம்போலத் தொடர்ந்து நடித்துவரும் சமந்தா அண்மையில் தனது கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்தார். ஆனாலும் திருமணமோ விவாகரத்தோ அவரது திரை வாழ்க்கையை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. அந்த வகையில், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பிஸி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா.

மேலும் படிக்க | சமந்தாவுடன் விஜய்சேதுபதியின் ரொமான்ஸ்...! காத்துவாக்குல ரெண்டு காதல் Next Single.!

இந்நிலையில் தென்னிந்திய நடிகைகளின் சம்பள விபரம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நடிகை நயன்தாரா ஒரு படத்துக்கு சுமார் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. சம்பளத்தைப் பொறுத்தவரை இந்தப் பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாகவே நயன்தாராதான் தொடர்ந்து முன்னணியில் இருந்துவருகிறார். இதற்கு அடுத்த இடத்தை நடிகை சமந்தா பிடித்துள்ளார். இவர் ஒரு படத்துக்கு சுமார் 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் அவருக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் இவ்வளவு தொகை கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

                                                                                                  Samantha-Photo

அண்மையில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆட மட்டுமே நடிகை சமந்தாவுக்கு சுமார் ஒன்றரைக் கோடி வரை கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. தமிழில் விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துவரும் சமந்தாவின் கைவசம், சில தெலுங்குப் படங்களும் உள்ளன. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்துவரும் சமந்தா, அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் முதலிடம் பிடித்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்!

மேலும் படிக்க | 12YearsOfSamantha: சமந்தா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News