ஜானகியால் கடுப்பாகும் மாயா..பாசத்தை பொழியும் சந்தியா-சந்தியா ராகம் எபிசோட் அப்டேட்

Sandhya Raagam Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம்.

Written by - Yuvashree | Last Updated : Oct 20, 2023, 12:56 PM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் தொடர் சந்தியா ராகம்.
  • இதில் நாளுக்கு நாள் எதிர்பாராத ட்விஸ்டுகள் நிகழ்கிறது.
  • இன்று நடக்கப்போகும் ட்விஸ்டுகள் என்ன? இங்கே பார்ப்போம்.
ஜானகியால் கடுப்பாகும் மாயா..பாசத்தை பொழியும் சந்தியா-சந்தியா ராகம் எபிசோட் அப்டேட் title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜானகி வீட்டிற்கு வந்து சந்தியாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, சந்தியா அக்காவை ஆசையோடு வீட்டிற்குள் அழைத்து சென்று வீடு முழுவதையும் சுற்றி காட்டுகிறாள். அவளுடனான நினைவுகளை பகிர்ந்து கொள்கிறாள், இது உன்னுடைய ரூம் என்று சொல்லி ஒரு அறையை காட்ட நான் வருவேன்னு உனக்கு எப்படி தெரியும் என்று ஜானகி கேட்க சந்தியா எனக்கு தெரியும் அக்கா. தினமும் உன்ன பத்தி மாயா கிட்ட பேசிட்டே இருப்பேன் என்று சொல்ல மாயா அதையெல்லாம் கேட்டு கடுப்பாகிறாள். 

மேலும் படிக்க | லியோ டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை.. சிக்கிய 3 பேர் “சிறைக்கு அனுப்பிய காவல்துறை”

அதனை தொடர்ந்து இங்கே ரகுராம் சோகமாகவே உட்கார்ந்திருக்க அங்கே வரும் அவருடைய அம்மா என்னாச்சு என்று கேட்க நான் ஜானகிக்கு நல்ல புருஷனா இருக்கேனா என்று கேட்க ஜானகி உன் மேல உயிரையே வச்சிருக்கா, இந்த வீட்ல இருக்க ஒவ்வொருவருக்கும் என்ன வேணும் என்பதை பார்த்து பார்த்து செய்யுறா. என்னை அவ மாமியாரை பாக்கிறது இல்ல அம்மாவா தான் பார்க்கிறாள் என்று ஜானகியை புகழ்ந்து சொல்கிறாள். 

திரும்பவும் அமெரிக்காவில் சந்தியாவும் ஜானகியும் பேசி கொண்டிருக்க ஜானகி ஒரு பாக்ஸை திறந்து சந்தியா சிறு வயதில் பயன்படுத்திய பொருட்களை எடுத்து காட்ட மாயா இதையெல்லாம் பார்த்து கடுப்பாகி காலேஜ் கிளம்புவதாக அம்மாவிடம் சொல்ல அவள் பெரியதாக கண்டு கொள்ளாமல் இருப்பதால் ஜானகி மீதான வெறுப்பு மாயாவிற்கு அதிகமாகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியாராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | விஷாலால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த விடியல்! இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News