சீதா ராமன் அப்டேட்: கைதான சூர்யா, சீதாவை அறைந்த மதுமிதா.. மகா விட்ட சவால்!!

Seetha Raman Today's Episode Update: போலீஸ் சூர்யாவை கைது செய்ய மதுமிதா கதறி அழுகிறாள். பிறகு மகா மதுவை வீட்டுக்கு அழைத்து வருகிறாள்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 25, 2023, 11:49 AM IST
  • போதை பொருளை வெளியே எடுக்கும் போலீஸ்.
  • கைதாகும் சூர்யா, கதறி அழும் மதுமிதா.
  • சீதாவை அடிக்கும் மதுமிதா,
சீதா ராமன் அப்டேட்: கைதான சூர்யா, சீதாவை அறைந்த மதுமிதா.. மகா விட்ட சவால்!! title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 

மதுமிதாவின் வீட்டுக்கு போலீஸ் வந்த நிலையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

போதை பொருளை வெளியே எடுக்கும் போலீஸ்

அதாவது போலீஸ் இந்த வீட்டில் போதை பொருள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என சொல்ல எல்லாரும் அதெற்கெல்லாம் வாய்ப்பு இல்லை என்று சொல்ல போலீஸ் வீட்டில் சோதனை நடத்தி போதை பொருளை வெளியே எடுக்க மதுமிதா, சூர்யா, சீதா ஆகியோர் அதிர்ச்சி அடைந்து இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என வாக்கு வாதம் செய்கின்றனர். 

மேலும் படிக்க | Japan Teaser: கார்த்தி ரசிகர்களுக்கு ட்ரீட்..4 ஹீரோக்கள் சேர்ந்து வெளியிட்ட ‘ஜப்பான்’ படத்தின் டீசர்..!

கைதாகும் சூர்யா, கதறி அழும் மதுமிதா

ஆனால் போலீஸ் இப்போதைக்கு சூர்யாவை கைது செய்வதை விட வேறு வழி கிடையாது என்று சொல்லி கைது செய்ய மதுமிதா கதறி அழுகிறாள்.

பிறகு மகா மதுவை வீட்டுக்கு அழைத்து வந்து உன்னுடைய வாழ்க்கையை நீ தான் காப்பாத்திக்கணும், நீ இதையெல்லாம் எதிர்த்து போராடனும் என சொல்ல அந்த சமயம் அங்கு சீதா வருகிறாள். 

சீதாவை அடிக்கும் மதுமிதா

சீதாவை பார்த்ததும் மதுமிதா வேகமாக சென்று அவளை அறைகிறாள்.

‘நான் உனக்கு சின்ன வயசுல சாப்பாடு எல்லாம் கொடுத்து அம்மா போல பாத்துக்கிட்டேன், ஆனால் நீ அப்பா கூட சேர்ந்து என் வாழ்க்கையை அழிக்க பாக்குற’ என ஆவேசப்படுகிறாள். சீதா இதெல்லாம் நான் பண்ணது இல்ல, மகாலட்சுமி செய்தது என்று சொல்ல, மது, ‘இனிமே ஒரு வார்த்தை பேசாத, நீ அவங்களை பத்தி சொல்றதெல்லாம் பொய் தான்’ என ஆவேசப்படுகிறாள். 

மேலும் படிக்க | Karthi Birthday: ரக்கட் பாய் பருத்திவீரன் டூ சாக்லேட் பாய் வந்தியத்தேவன்-கார்த்திக்கு ஏற்றம் கொடுத்த கதாப்பாத்திரங்கள்..!

பதற்றமடையும் மகா
இதனால் சீதா ரூமில் அமர்ந்து கண் கலங்க அங்கு வரும் மகா, ‘பார்த்தியா இப்போ உன் அக்கா என்னுடைய பக்கம். உன்னையும் ராமையும் பிரிகிறது பெரிய விசியமே கிடையாது’ என சவால் விட சீதா, ‘உண்மை தான் ஜெயிக்கும். ராம் அம்மா மீனாட்சி இறந்து போனதுக்கு காரணங்கள் எல்லாம் எனக்கு தெரியும், அதையெல்லாம் நான் வெளியே கொண்டு வருவேன்’ என சொல்ல மகா பதற்றமடைகிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | New Movies: இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகவுள்ள புது திரைப்படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News