நான்ஸி வைத்த செக்மேட்.. தாலியை கழட்டுவாளா சீதா? சீதாராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

சீதா தாலியை கழட்டுமாறு நான்ஸி ஒரு செக்மேட் பிளானை சொல்ல, அதனை கேட்டுக் கொண்டு சீதா எடுக்கப் போகும் முடிவு என்ன என்பது தான் சீதாராமன் சீரியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 5, 2024, 02:41 PM IST
  • நான்ஸி வைத்த செக்மேட்.. தாலியை கழட்டுவாளா சீதா?
  • சீதா ரூமுக்குள் வருத்தமாக இருக்கிறாள்
  • சீதாராமன் இன்றைய எபிசோட் அப்டேட்
நான்ஸி வைத்த செக்மேட்.. தாலியை கழட்டுவாளா சீதா? சீதாராமன் இன்றைய எபிசோட் அப்டேட் title=

தமிழ் சின்னத் திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கிளைன்ட் இருவர் வந்து இன்னும் 1 வாரத்தில் நாங்க கொடுத்த ஆர்டரை முடித்து கொடுக்கணும் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | சாமுண்டேஸ்வரியை கொல்ல நடக்கும் சதி! மாரி சீரியல் அப்டேட்!

அதாவது, சீதா நான்சியிடம் சென்று ஆர்டரை முடிக்க உதவி கேட்க உனக்கு இந்த குடும்பம் முக்கியம்னா தாலியை கழட்டி வச்சிட்டு ராமை பிரிந்து போ எல்லா பிரச்சனையும் நான் தீர்த்து வைக்கிறேன் என்று செக்மேட் வைக்கிறாள். 

இதனையடுத்து சீதா ரூமுக்குள் வருத்தமாக இருக்க ராம் நீ எதுக்கு நான்ஸி கிட்ட போய் பேசுன என்று கோபப்பட சீதா இது எனக்கும் நான்ஸிக்கும் இருக்க பிரச்னை, நான் பார்த்துக்கறேன் என்று சொல்கிறாள். அதன் பிறகு அர்ச்சனாவும் சுபாஷும் நான்ஸியை சந்தித்து பேசுகின்றனர். நீங்க அந்த சீதா ஜெயிலுக்கு போக உதவி பண்ணுங்க என்னுடைய 25% ஷேரை உங்களுக்கு எழுதி கொடுத்துடுறேன் என்று சொல்கிறாள். அவர்களும் ஓகே என்று சம்மதிக்கின்றனர்.

மறுநாள் காலையில் சீதா நான்சியிடம் பேச கூப்பிட சுபாஷ் அர்ச்சனா நீ இங்கேயே இரு, முதல்ல நாங்க போய் பேசுறோம் அப்புறம் நீ வா என்று வெளியே வருகின்றனர். சீதா நான்ஸியிடம் பேசணும் என்று சொல்ல நான்ஸி வெளியே வந்து என்ன முடிவு எடுத்திருக்க என்று கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன?  குடும்பத்திற்காக சீதா எடுக்க போகும் முடிவு என்ன என்பது குறித்து அறிய சீதாராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணதவறாதீர்கள்.

மேலும் படிக்க | ஆக்சிடென்ட் பண்ணவாரு ஒருத்தரு! ஆனா சரண்டர் ஆனது இன்னொருத்தரு! வீரா சீரியல் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News