அண்ணா சீரியல்: கல்யாண மேடையில் காத்திருக்கும் அதிர்ச்சி.. உண்மையை அறியும் ஷண்முகம்

கல்யாண மேடையில் காத்திருக்கும் அதிர்ச்சி.. ஷண்முகத்திற்கு தெரிய வரும் உண்மைகள் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 2, 2024, 12:35 PM IST
  • அண்ணா சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
  • ஷண்முகம் கல்யாணத்தை நிறுத்த ஓடி வருகிறான்.
  • முத்துப்பாண்டி இசக்கி கழுத்தில் தாலி கட்டி விடுகிறான்.
அண்ணா சீரியல்: கல்யாண மேடையில் காத்திருக்கும் அதிர்ச்சி.. உண்மையை அறியும் ஷண்முகம் title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி ரத்னா கழுத்தில் தாலி கட்ட சௌந்தரபாண்டி பிளானை சொல்ல அதை கவிதாவின் தாய் மாமா கேட்டு விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோட்

அதாவது, எல்லாரிடமும் உண்மையை சொல்ல வந்த அவரை அடித்து சரக்கு ஊற்றி விட்டு ரூமுக்குள் அடைத்து வைக்கின்றனர். ஷண்முகம் மனசு என்னமோ படபடன்னு இருக்குனு தூக்கம் வராமல் உலாத்தி கொண்டிருக்க பரணி இன்னும் 28 நாள் தான், அதுக்கு அப்புறம் நான் கிளம்பி போய்டுவேன் என சொல்ல ஷண்முகம் உன் முடிவில் மாற்றம் இல்லையா என கேட்க பரணி இல்லை என சொல்லி விடுகிறாள். 

பிறகு கவிதாவின் தாய் மாமாவுக்கு போதை தெளிய அவர் ஷண்முகத்திடம் உண்மையை சொல்ல வர கவிதாவின் அக்கா புருஷன் போதையில் இருக்கார, எதையாவது உளறிட்டு இருப்பாரு. நம்பாதீங்க என சொல்கிறார். மறுநாள் காலையில் ஷண்முகம் மண்டபத்திற்குள் நுழையும் போது பந்தக்கால் சாய்ந்து கிடப்பதை பார்க்க ஏதோ அபச குணமாக தோன்றுவது போல உணர்கிறான். 

மேலும் படிக்க | பிரபல நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் 32 வயதில் மரணம்!

முகூர்த்த நேரம் நெருங்க முத்துப்பாண்டி மணமேடை ஏற ஷண்முகம் நீ ரத்னா வாழ்க்கையில் பிரச்சனை பண்ணதுக்கு இந்நேரம் உன்னை கொன்னு இருக்கணும், இப்போ உனக்கு கல்யாணம் நடக்க போகுது, இனிமேலாவது நல்லபடியா இரு என சொல்கிறார். பிறகு கவிதாவின் தாய் மாமா உன்னை ஏமாத்த போறாங்க பா, உன் தங்கச்சியை காப்பாற்று என சொல்ல சூடாமணி உன் தங்கச்சியில் ஒருத்தி நம்மள விட்டு போக போறது மாதிரியே இருக்கு என சொன்னது நினைவிற்கு வருகிறது. 

ஷண்முகம் கல்யாணத்தை நிறுத்த ஓடி வர முத்துப்பாண்டி இசக்கி கழுத்தில் தாலி கட்டி விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து  நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்று தான் ‘அண்ணா’ சீரியல்.

அண்ணா சீரியலை எங்கு பார்ப்பது?

அண்ணா சீரியல் ஜீ தமிழ் (Zee Tamil) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | சின்னத்திரை நடிகரை கரம் பிடித்த ‘சாட்டை’ பட நாயகி! ரசிகர்கள் வாழ்த்து..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News