Ayushmann Khurrana's Father Death: பாலிவுட் நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா மற்றும் அபர்சக்தி குரானா ஆகியோரின் தந்தை ஆச்சார்யா பி குரானா உடல்நலக்குறைவால் இன்று காலமானார் என அவரின் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிக்கை மூலம் அறிவித்துள்ளனர்.
ஜோதிடத்தில் பிரபலமானவர்
அதில், "ஆயுஷ்மான் மற்றும் அபர்சக்தி குரானாவின் தந்தை ஜோதிடர் பி குரானா, நீண்ட காலமாக குணப்படுத்த இயலாத நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் மொஹாலியில் காலமானார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பெரும் இழப்பு ஏற்பட்ட நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகளுக்கும் ஆதரவிற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
ஜோதிடத் துறையில் தனது பங்களிப்பிற்காக பி குரானா வட இந்தியாவில் பிரபலமாக அறியப்பட்டார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரைச் சேர்ந்த அவர், தனது துறையில் பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
தந்தை குறித்து ஆயுஷ்மான்
தனது தந்தை குறித்து ஆயுஷ்மான் குரானா ஒரு பேட்டியில் முன்பு கூறியதாவது,"எனது தந்தையின் போதனைகளை நான் நம்புகிறேன். அதை அவர் இதயப்பூர்வமாக பின்பற்றினார். எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை, ஆனால் என் தந்தை எனக்கு வாழ்க்கையின் பயிற்சியாளராகவும், வழிகாட்டியாகவும் இருந்தார். அவர் எப்போதும் என்னிடம் மக்களின் நாடித் துடிப்பைப் பிடி என்று சொல்வார், நான் அதைச் செய்தேன்" என்றார்.
இன்று இறுதி சடங்கு
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இதய நோய் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 5.30 மணிக்கு சண்டிகரில் உள்ள மணிமஜ்ரா தகன மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் குரானா, 2012ஆம் ஆண்டில் 'விக்கி டோனர்' என்ற படத்தின் மூலம் அவர் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த திரைப்படம் தான் 2020ஆம் ஆண்டில் ஹரீஷ் கல்யாண் நடிப்பில்,'தாராள பிரபு' என்ற பெயரில் வெளியானது. மேலும், இவரின் 'Article 15' திரைப்படம் தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இவரது தம்பியான அபர்சக்தி குரானாவும் பாலிவுட்டில் நடிகர் ஆவார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ