Viral Video: லூசுப்பெண்ணே பாடலுக்கு ரசிகர் கூட்டத்துடன் சேர்ந்து ‘வைப்’ செய்த சிம்பு..!

Simbu at U1 Concet: பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. இதில், நடிகர் சிம்பு கலந்து கொண்டு தனது வெறித்தனமாக பர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தினார்.   

Written by - Yuvashree | Last Updated : Jul 16, 2023, 11:43 AM IST
  • மலேசியாவில் நேற்று யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைப்பெற்றது.
  • இதில், நடிகர் சிம்பு கலந்து கொண்டு லூசுப்பெண்ணே பாடல் பாடினார்.
  • இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Viral Video: லூசுப்பெண்ணே பாடலுக்கு ரசிகர் கூட்டத்துடன் சேர்ந்து ‘வைப்’ செய்த சிம்பு..! title=

தமிழ் திரையுலகின் இசைக்குடும்பத்தில் இருந்து வந்த முத்தான இசையமைப்பாளர், யுவன் சங்கர் ராஜா. இசைஞானி என அழைக்கப்படும் இளையராஜாவன் மகனான இவர், கோலிவுட்டின் முன்னிய இசையமைப்பாளர்களுள் ஒருவர். 90’ஸ் கிட்ஸ்களில் ஆரம்பித்து இன்றைய கிட்ஸ் வரை பலரையும் தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார். 

இசை நிகழ்ச்சி..

பல இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். யுவன் சங்கர் ராஜாவும் கடந்த சில வருடங்களாக இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். சென்னையில் ஆரம்பித்த இவரது இசை நிகழ்ச்சி பயணம் இப்போது விமானம் ஏறி வெளிநாடு வரை போய் விட்டது. அடிக்கடி மலேசியாவில் இவர் இசை நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். நேற்றும் இவரது இசை நிகழ்ச்சி ஒன்று மலேசியாவில் நடைப்பெற்றது. 

மேலும் படிக்க | ‘அந்த இடத்தில் தொட்டுட்டாரு..’ ஷகிலாவிற்கு நேர்ந்த பாலியல் கொடுமை..!

சிம்பு பங்கேற்பு..

தமிழின் முன்னணி நடிகரான சிலம்பரசன், நேற்றைய யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சிம்பு, யுவன் சங்கர் ராஜாவுடன் கைகோர்த்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் தான் நடித்துள்ள படங்கள் மட்டுமன்றி பிற ஹீரோக்களின் படங்களுக்கு யுவன் இசையமைத்தாலும் அவர்களுக்கு பாடல் பாடி தருவார். இவர் நேற்று இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பலரையும் மகிழ்ச்சயில் ஆழ்த்தியது. 

லூசுப்பெண்ணே பாடல்..

சிம்பு, நயன்தாரா, ரீமாசென், ‘காதல்’ சந்தியா உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம், ‘வல்லவன்’. இந்த படம், கடந்த 2006ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார், படத்தை சிம்புவே நடித்து இயக்கியிருந்தார். இந்த படத்தில் நாயகன்-நாயகிக்கு ப்ரேக்-அப் ஆகும் போது வரும் பாடல், “லூசுப்பெண்ணே..” இந்த பாடலை சிம்புவுடன் சேர்ந்து ப்ளேஸ் என்ற ராப் பாடகரும் பிரேம்ஜியும் பாடியிருந்தனர். இது, அன்றைய இளசுகள் மத்தியிலேயே பெரிய ஹிட் ஆகியிருந்தது. அப்போதிருந்து இப்போது வரை பலருக்கு காதல் முறிவு பாடலாக உள்ளது, ‘லூசுப்பெண்ண..’

வைப் செய்த சிம்பு..

நடிகர் சிம்பு, நேற்றைய யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் ‘லூசுப்பெண்ணே’ பாடலை பாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார். 

High On U1 இசை நிகழ்ச்சியில் யுவனுடன் மேடயேறிய சிம்பு, லூசுப்பெண்ணே பாடலை முழுவதுமாக பாடினார். இந்த வீடியோவை ரசிகர்கள் இணையம் முழுவதும் வைரலாக்கி வருகின்றனர். 

சிம்பு பாடிய பாடல்கள்:

வல்லவன் படத்தில் வரும் இன்னொரு பாடல், ‘எம்மாடி ஆத்தாடி..’ இந்த பாடலை சிம்பு-டி.ராஜேந்தர் என இருவரும் சேர்ந்து பாடியிருப்பர். பல இளைஞர்களை குத்தாட்டம் போட வைத்த பாடல் இது. நேற்றைய நிகழ்ச்சியில் சிம்பு இந்த பாடலை நடனமாடிக்கொண்டே பாடினார். 

இந்த வீடியோவையும் ஒரு ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

“Where is the Party..?” 

சிம்பு நடித்திருந்த ‘சிலம்பாட்டம்’ படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்,“Where is the Party..?” இந்த படத்திற்கும் யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்திருந்தார்.

நேற்றைய விழாவில் பலரும் சிம்புவிற்கு சியர் செய்ய சிம்பு Where is the Party பாடலை பாடி அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். 

மேலும் படிக்க | Jailer 2nd Single: ஜெயிலர் 2வது சிங்கிள் அப்டேட்-‘Tiger Ka Hukum’ என்றால் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News