4 கோடி சம்பளத்தை குடுங்க, சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு

சம்பளப் பாக்கி தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 29, 2022, 11:22 AM IST
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவகார்த்திகேயன் வழக்கு
  • தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது வழக்கு தொடர்ந்தார்
  • ரூ. 4 கோடி சம்பள பாக்கி இருப்பதாக புகார்
4 கோடி சம்பளத்தை குடுங்க, சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு title=

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் வருகிற மே 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது அயலான் படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தனது நடிப்பில் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தைத் தயாரிக்க, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு, ரூ.15 கோடி சம்பளம் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு மே மாதம் படம் வெளியான நிலையில், இதுவரை ரூ. 11 கோடி மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு, ரூ.4 கோடி பாக்கி வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

sivakarthikeyan

ரூ.11 கோடிக்கான டிடிஎஸ் தொகையை பிடித்தம் செய்த ஞானவேல் ராஜா, அதை வருமான வரித்துறையில் செலுத்தாததால், 2019-20, 2020-21ஆம் ஆண்டுகளுக்கான டிடிஎஸ் தொகை ரூ.91 லட்சத்தை செலுத்த வேண்டும் என தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து முன்னரே வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே ரூ. 4 கோடி சம்பள பாக்கியைத் தனக்குச் செலுத்துவதற்கும், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமான வரித் துறையிடம் செலுத்துவதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிடவேண்டும் என சிவகார்த்திகேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க | பற்றி எரியும் Beast VS KGF-2: விஜய் குறித்து என்ன சொன்னார் யஷ்?!

அவ்வாறு செலுத்தும் வரை, ஞானவேல்ராஜா தயாரித்துவரும் ஜி.வி.பிரகாஷின் ‘ரிபெல்’, விக்ரம் நடிக்கும் ‘சீயான்61’, சிம்பு -கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘பத்து தல’ ஆகிய படங்களில் மேற்கொண்டு முதலீடு செய்வதற்கும், திரையரங்க வெளியீடு மற்றும் ஓடிடி வெளியீடு ஆகியவற்றின் விநியோக உரிமைகளை உறுதி செய்வதற்கும் தடைவிதிக்கவும் சிவகார்த்திகேயன் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 31ஆம் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி, வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்துள்ளது.

மேலும் படிக்க | ‘பீஸ்ட்’ போஸ்டர்ல இந்த விஷயங்களைக் கவனிச்சீங்களா!?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News