உலகளவில் நெட்பிளிக்ஸ் டாப் 10-ல் இடம்பிடித்த டாக்டர்- சிவகார்த்திகேயன் நன்றி

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம், உலகளவிலான நெட்பிளிக்ஸ் டாப் 10 லிஸ்டில் 10வது இடத்தையும், இந்திய அளவில் 3வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளது.

Written by - S.Karthikeyan | Edited by - Vijaya Lakshmi | Last Updated : Nov 20, 2021, 01:03 PM IST
உலகளவில் நெட்பிளிக்ஸ் டாப் 10-ல் இடம்பிடித்த டாக்டர்- சிவகார்த்திகேயன் நன்றி title=

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ’டாக்டர்’ திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டர்களில் நேரடியாக ரிலீஸானது. லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களில் வெளியான இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்திருந்தார். இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, அர்ச்சனா, தீபா உள்ளிட்ட நட்சத்திரங்களும் சிறப்பாக நடித்திருந்தனர். 

ஹீரோவுக்குப் பிறகு இயக்குநர் திலீப் குமார் - சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கூட்டணி இப்படத்தில் இணைந்தது. அனிரூத் இசையமைந்திருந்தார். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டானதால், டாக்டர் (Doctor) திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகபோகமாக இருந்தது. அதனை கொஞ்சமும் படக்குழு வீண்டிக்கவில்லை. டார்க் காமெடி ஜானரில் வெளியான இப்படத்துக்கு விமர்சனங்களும் பாசிட்டிவாக வந்தது. திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் படையெடுத்தது. தியேட்டர்கள் ஹவுஸ்புல்லானதால், படக்குழு, தியேட்டர் ஓனர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியடைந்தனர்.

ALSO READ | அசால்டாக அசத்தி இருக்கும் சிவகார்த்திகேயன்! டாக்டர் பட விமர்சனம்! 

சிவகார்த்திகேயன் புரொடக்ஸனுடன் இணைந்து திரைப்படத்தை தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், டாக்டர் திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்த இயக்குநர் நெல்சன் திலீப் குமார், தன் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிரூத் உள்ளிட்டோருக்கு நன்றிகளை தெரிவித்திருந்தார்.

 

 

இப்படத்தின் சாட்டிலைட் உரிமையைப் பெற்றிருந்த சன் தொலைக்காட்சி தீபாவளி விருந்தாக சன் டிவியில் ஒளிபரப்பியது. ஓடிடி ஃப்ளாட்பார்மில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் டாக்டர் திரைப்படத்தை வெளியிட்டது. அந்த தளத்திலும் உலகளவில் அமோக வரவேற்பு இருந்தது. இந்நிலையில் டாக்டர் திரைபடம் குறித்த சூப்பரான நியூஸ் ஒன்றை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது, அதில், கடந்த இரு வாரங்களாக நெட்பிளிக்ஸ் ப்ளாட்ஃபார்மில் வெளியான திரைப்படங்களில் டாக்டர் திரைப்படம் உலகளவில் டாப் 10-ல் இடம்பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்திய அளவில் 3வது இடத்தையும் பிடித்திருப்பதாகவும் கூறியுள்ளது.

நெட்பிளிக்ஸின் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்துள்ள சிவகார்த்திகயேன், இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் கிடைத்த வெற்றி எனத் தெரிவித்துள்ளார். டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த வெற்றி என்பது உண்மையிலேயே மிகப்பெரியது எனக் கூறியுள்ளார். ஒவ்வொரு மீதும் வைத்த நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி எனத் தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மற்றும் அனிரூத் ஆகியோருக்கு நன்றிகளைக் கூறியுள்ளார். மேலும், டாக்டர் திரைப்படம் எப்போதும் தன்னுடைய மனதுக்கு நெருக்கமாக இருக்கும் என சிவா கார்த்திகேயன் கூறியுள்ளார். குழுவாக இணைந்து பணியாற்றும்போது வெற்றி சாத்தியமே என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரின் வரிசையில், டாக்டர் திரைப்படம் சிவகார்த்திகேயனையும் 100 கோடி ரூபாய் கிளப்பில் சேர்த்துள்ளது. இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்களும் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். 

ALSO READ Doctor Review: வெளியானது டாக்டர்; Twitter விமர்சனம் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News