Maaveeran First Review: மாவீரன் படத்தை பார்த்த உதயநிதி! என்ன சொன்னார் தெரியுமா?

Maaveeran Review: சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் படத்திற்கு படத்திற்கு ரிவியூ கொடுத்துள்ளார்.   

Written by - RK Spark | Last Updated : Jul 13, 2023, 11:42 AM IST
  • மாவீரன் ஜூலை 14, 2023 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.
  • மாவீரன் படத்திற்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார்.
  • ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு.
Maaveeran First Review: மாவீரன் படத்தை பார்த்த உதயநிதி! என்ன சொன்னார் தெரியுமா? title=

சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் ரிலீஸுக்கு முழுவீச்சில் தயாராகி வருகிறது. இப்படம் ஜூலை 14, 2023 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ஒற்றை ட்வீட் படத்திற்கு எதிர்பாராத அளவு ஹைப்பை உருவாக்கியுள்ளது. இந்த ட்வீட் ரிலீஸுக்கு ஒரு நாள் முன்னதாக மாமன்னனுக்காக தனுஷ் போட்ட ட்வீட்டுடன் நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். இதை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், மேலும் இது தமிழகத்தில் படத்திற்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.  நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக ஒரு திரைப்படத்தை மதிப்பிடுவதில் அவருக்கு இருக்கும் திறமையை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். எனவே டான் மற்றும் டாக்டருக்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படம் மீண்டும் ஒரு பிளாக்பஸ்டராக இருக்கும் என்று ரசிகர்கள் இப்போது மாவீரன் பற்றிய அவரது ட்வீட்டில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ரஜினி-கமல் படங்களில் பணிபுரிந்த திரைப்பிரபலம் உயிரிழப்பு..!

இந்த வாரம் வெளியாகும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திற்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மடோன் அஷ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, சுனில் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் மாவீரன். இந்த படத்திற்காக பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதன்படி படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் அவரது குழுவினர் கொச்சி மற்றும் பெங்களூருவில் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகள் அனைத்திலும் சிவகார்த்திகேயனுக்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி பிற மாநில ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களை பார்த்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சிவகார்த்திகேயன் தனது மெரினா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மெரினாவில் நடைபெற்றது என்றும் மொத்தம் 50 பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் சிவகார்த்திகேயன் ஏற்கனவே கூறினார். மாவீரன் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் அதிக அளவில் கலந்து கொண்ட ரசிகர்களை கண்டு மிகவும் ஆவலாக உள்ளதாக கூறினார். மற்ற மாநிலங்களிலும் சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதை இந்த நிகழ்ச்சிகள் வெளிப்படுத்தின.  மாவீரன் படத்திற்கு முதல் நாளே அதிக அளவில் டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளது. மேலும், சுமார் 60 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள மாவீரன் படத்திற்கு தடை விதிக்க கோரி இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் P.ஜெயசீலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு குழு விசாரித்தது. மாவீரன் படத்தை வெளியிட தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம் இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில், படத்தின் காட்சிகளில் இடம்பெறும் கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனலில் வெளியிட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. மாவீரன் படத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்படவில்லை என 40 வினாடிகளுக்கு பொறுப்புத் துறப்பை (Disclaimer) போட்ட பின்னரே திரையரங்குகளில் வெளியிட வேண்டுமென சிவகார்த்திகேயனின் மாவீரன் படத் தயாரிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ‘போர் தொழில்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளி வைப்பு..! காரணம் இதுதான்..!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News