டாக்டராக உருவெடுக்கும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது டாக்டர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.

Updated: Dec 3, 2019, 08:47 AM IST
டாக்டராக உருவெடுக்கும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது டாக்டர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் நம்ம வீட்டுப் பிள்ளை. குடும்பக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை அடுத்து இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் தற்போது கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிக்க இருக்கிறார்கள். இந்த புதிய படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 6ம் தேதி தொடங்க இருக்கிறது.

இந்தப் படத்துக்கு ‘டாக்டர்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.