சூப்பர் அப்டேட்... நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸாகும் பிரபல சீரியல் நடிகரின் படம்!

Zee Tamil Television: நடிகர் கார்த்திக் ராஜ் நடிப்பிலும், தயாரிப்பிலும் உருவாகியுள்ள 'பிளாக் அண்ட் வைட்' திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : May 11, 2023, 09:59 AM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'பிளாக் அண்ட் வைட்' திரைப்படம் வெளியாகிறது.
  • மே 14ஆம் தேதி மாலை 4 மணிக்கு திரைப்படம் ஒளிப்பரப்பப்படும் என அறிவிப்பு.
  • இப்படம் தொலைக்காட்சியின் டிஆர்பியிலும் சாதனை படைக்கும் என எதிர்பார்ப்பு.
சூப்பர் அப்டேட்... நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸாகும் பிரபல சீரியல் நடிகரின் படம்! title=

Zee Tamil Television: தமிழ் சின்னத்திரையில் 'ஆபீஸ்' சீரியல் மூலமாக அறிமுகமாகி, அதன் பிறகு 'செம்பருத்தி' என்ற சீரியலில் ஆதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர், கார்த்திக் ராஜ். 

ரம்யா பாண்டியனுடன் வெப் சீரிஸ்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து அவர் விலகினார். தொடர்ந்து, இவர் அதன் பிறகு ரம்யா பாண்டியனுடன் இணைந்து வெப் சீரிஸ் ஒன்றில் நடித்தார். 

மேலும் தற்போது மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுத்து கார்த்திகை தீபம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். செம்பருத்தி சீரியலை போல இந்த சீரியலும் ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல  வரவேற்பை பெற்று வருகிறது. 

Zee Tamil

நடிப்பும், தயாரிப்பும்

இந்த நிலையில் கார்த்திக் ராஜ் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிளாக் அண்ட் வைட்'. இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. லாக் டவுனால் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த கார்த்திக்கின் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது? வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்படும் நிலையில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

மேலும் படிக்க | பாகுபலிக்கு வந்த மோசமான விமர்சனங்கள்... முதன்முதலாக கவலையை பகிர்ந்த ராஜமௌலி!

நேரடியாக தொலைக்காட்சியில்... 

ஏற்கனவே படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளளது. இந்த படம் நேரடியாக டிவி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம், நீங்கள் படித்து சரிதான் திரையரங்கம், ஓடிடி இல்லாமல் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ளது. 

அதாவது, வரும் மே 14ஆம் தேதி ஞாயிறுக்கிழமையான அன்று மாலை 4 மணிக்கு, கார்த்திக்கின் 'பிளாக் அண்ட் வைட்' திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Zee Tamil

குதூகலத்தில் ரசிகர்கள் 
 
இந்த அறிவிப்பு கார்த்திக் ராஜ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் டிஆர்பி ரேட்டிங்கிலும் பெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  விறுவிறுப்பான கதைக்களத்துடன் நேரடியாக சின்னத்திரையில் வெளியாகும் பிளாக் அண்ட் வைட் திரைப்படத்தை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 

மேலும் படிக்க | வெளியானது கேப்டன் மில்லர் அப்டேட் ...தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News