ஆஸ்கர் தகுதி பட்டியலில் சூர்யாவின் ஜெய் பீம்; தட்டித் தூக்குவாரா?

94வது ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் இடம்பிடித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 21, 2022, 11:38 AM IST
ஆஸ்கர் தகுதி பட்டியலில் சூர்யாவின் ஜெய் பீம்; தட்டித் தூக்குவாரா? title=

சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற 'ஜெய் பீம்' (Jai bhim), கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜோதிகா மற்றும் சூர்யா (Actor Suriya) இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியான 'ஜெய் பீம்' (Jai Bhim) திரைப்படம் மொழி, இனம், கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

ALSO READ | ஆஸ்காரின் யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் 'ஜெய் பீம்'!

 

இந்த திரைப்படம் 1990களில் நடந்த உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மீது செய்யாத தவறுக்காக காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை தோலுரிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த படத்தில் பாதிக்கப்பட்ட செங்கேணிக்கு நீதி கிடைக்க சட்ட ரீதியாக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஆஸ்கர் யூடியூப் (Oscar Youtube) தளத்தில் ஜெய் பீம் பட காட்சி இடம்பெற்று வரலாறு படைத்தது. தற்போது ஆஸ்கர் விருதுக்கான (Oscar Award) போட்டியிலும் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் சென்றுள்ளது. அதன்படி ஆஸ்கர் விருதுகான போட்டியில் உலகெங்கிலும் இருந்து 276 படங்கள் தேர்வாகி உள்ளன. அதில் சூர்யாவின் ஜெய் பீம் மற்றும் மோகன்லாலின் மரைக்காயர் ஆகிய 2 இந்திய படங்கள் இடம்பெற்று உள்ளன. இதில் சிறந்த நடிகர் பிரிவுக்கான போட்டியில் சூர்யாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | எதற்கும் துணிந்தவன் படத்திற்கு தணிக்கை குழு அளித்த சான்றிதழ்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News