’இங்க நீங்க போய்டு வாங்க’ சுற்றுலா செல்ல ஜோதிகா - சூர்யா சொல்லும் வெளிநாடு

வெளிநாடு சுற்றுலா சென்று இருக்கும் சூர்யா - ஜோதிகா தம்பதி, பயணத்தின் புதிய புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 24, 2022, 12:50 PM IST
  • சூர்யா - ஜோதிகாவின் வெளிநாடு சுற்றுலா
  • குடும்பத்துடன் கோஸ்டாரிக்காவுக்கு சென்றுள்ளனர்
  • சாகச விளையாட்டுகளை விளையாடி உற்சாகம்
’இங்க நீங்க போய்டு வாங்க’ சுற்றுலா செல்ல ஜோதிகா - சூர்யா சொல்லும் வெளிநாடு title=

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா நட்சத்திர தம்பதி, குடும்பத்தோடு வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளனர். மகன் மற்றும் மகள் ஆகியோர் பள்ளிப் பருவத் தேர்வுகளை முடித்துவிட்டு அடுத்த வகுப்புக்கு செல்ல இருக்கும் நிலையில், அவர்களை வெளிநாடு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார் சூர்யா. மத்திய அமெரிக்கா நாடான கோஸ்டாரிக்காவுக்கு சென்றுள்ள அவர்கள், அங்குள்ள அனைத்து சாகச விளையாட்டுகள் விளையாடுவதுடன், இயற்கை அழகுகளையும் ரசித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ‘வாரிசு’ படத்தில் நடிகர் விஜய் ஓட்டும் பைக்கின் விலை இத்தனை லட்சமா!

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை ஜோதிகா. அதில் கோஸ்டாரிக்காவில் கணவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம், மலைப் பயணம், சாகச விளையாட்டுகள் ஆகிய அழகான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இயற்கையின் அழகுகள் காண்போரையும் வியக்க வைப்பதுடன், நாமும் அங்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. தொங்கு பாலம், கயிறு மூலம் இறங்கி நீர்வீழ்ச்சியில் குளியல் என விடுமுறையை குதூகலமாக கொண்டாடியுள்ளனர். ஆற்றுக்குள்ளும் குடும்பத்துடன் சென்று மகிழ்ந்துள்ளனர்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jyotika (@jyotika)

ஜோதிகா பகிர்ந்துள்ள இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. பாலாவுடன் உருவாகும் புதிய படத்தில் நடித்த சூர்யா, அந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு சுற்றுலா சென்றுள்ளார். அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க இருக்கிறார். படங்களில் நடிப்பதைக் கடந்து 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் படத்தை தயாரித்தும் வெளியிட்டு வருகிறார். எது எப்படியோ? சூர்யா ஜோதிகாவின் கோஸ்டாரிக்கா சுற்றுலா, பலருக்கும் நாமும் அங்கு சென்றுவர வேண்டும் என்ற ஆசையை தூண்டியுள்ளது.     

மேலும் படிக்க | ’சும்மா வதந்தியை கிளப்பாதீங்க’ பதறிபோய் புகைப்படம் வெளியிட்ட எஸ்பிபி சரண்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News