தமன்னாவின் புதிய அவதாரம்! வியந்து பார்க்கும் மற்ற நடிகைகள்

நடிகை தமன்னா புதிய பான் இந்தியா படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் அந்தப் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 19, 2022, 07:22 PM IST
தமன்னாவின் புதிய அவதாரம்! வியந்து பார்க்கும் மற்ற நடிகைகள் title=

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருக்கும் தமன்னா, இப்போது கோலிவுட், பாலிவுட் மற்றும் டோலிவுட் என ரவுண்டு கட்டி அடித்து வருகிறார். அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்கும் அவர், புதியதாக பான் இந்தியா படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். பிரபல ஓடிடி நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. அந்தப் படத்தை இயக்குபவர் பிரபல பாலிவுட் இயக்குநரான மதுர் பண்டர்க்கார். தேசிய விருதுகளை வென்ற இயக்குநரான அவர், பெண்களை முதன்மைப்படுத்தும் கதைகளை இயக்குவதில் கைதேர்ந்தவர்.

 ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் பவுன்சர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது.  இந்தியாவின் உண்மையான 'பவுன்சர் நகரமான' அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட  ஒரு பெண் பவுன்சரின் கற்பனைக் கதையாகும். பிப்ரவரி 18 அன்று இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் நிறைவடைந்ததாக  நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | வீட்டை எல்லாம் இழக்கவில்லை.. ராக்கெட்ரி பெரிய வெற்றி ; மாதவன் போட்ட ட்வீட்

இந்நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. டப்பிங் பணிகளை சில நாட்களுக்கு முன் நடிகை தமன்னா தொடங்கி முடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் மதுர் பண்டர்க்கார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டதாக அறிவித்துள்ளார். இந்த படத்தில் தமன்னா உடன் சவுரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ் மற்றும் சாஹில் வைத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கதை மற்றும் திரைக்கதையை அமித் ஜோஷி, ஆராதனா தேப்நாத் மற்றும் மதுர் பண்டர்கார் எழுதி உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாக உள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் முதல் இரண்டு லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இரண்டு போஸ்டர்களிலும் தமன்னா பாட்டியா பவுன்சர் கெட்டப்பில் இருக்கிறார். 

மேலும் படிக்க | அரசியல் களத்தில் களம் காணும் திரிஷா; தேசிய கட்சியில் ஐக்கியமாக திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News