ஸ்டூடியோவுக்குள் முடங்கிக்கிடந்த தமிழ் சினிமாவை அவுட்டோருக்கு அழைத்து சென்றவர் இயக்குநர் பாரதிராஜா. கமல் ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினி உள்ளிட்டோரை வைத்து அவர் இயக்கிய 16 வயதினிலே திரைப்படம் தமிழ் திரையை புரட்டி போட்டது. அந்தப் படம் வந்த பிறகுதான் பலருக்கும் இயக்குநராகலாம் என்ற நம்பிக்கையும், எண்ணமும் தோன்றியது. அதனையடுத்து பலரும் சினிமா ஆசையோடு தங்களது சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வண்டி ஏறினர். பாரதிராஜா தொடர்ந்து இயக்கிய பல படங்களும் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவை. அவரிடம் உதவி இயக்குநராக இருந்து இயக்குநரான பாக்யராஜ், மணிவண்ணன் போன்றோர் இன்றளவும் பலரால் கொண்டாடப்படுகின்றனர்.
#rajakkal@offBharathiraja @thisisysr @Premgiamaren @vp_offl pic.twitter.com/doIG6veIC0
— manoj k bharathi (@manojkumarb_76) May 30, 2022
இவர் கடைசியாக ஓம் (மீண்டும் ஒரு மரியாதை) என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்துக்கு பிறகு எதுவும் இயக்காமல் இருக்கும் பாரதிராஜா பல படங்களில் நடித்துவருகிறார். அப்படி பாண்டியநாடு, திருச்சிற்றம்பலம், ராக்கி உள்ளிட்ட படங்களில் பாரதிராஜாவின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றது. பாரதிராஜவைப் பொறுத்தவரை தனது முதல் படமான 16 வயதினிலே படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்த ஜூலை 17ஆம் தேதியை தனது பிறந்தநாள் என பல ஆண்டுகளாக கொண்டாடிவருகிறார்.
ஆனால் அவரது பிறந்தநாள் ஆகஸ்ட் 23ஆம் தேதி ஆகும். அதன்படி இன்று அவருக்கு பிறந்தநாள். இந்நிலையில், இன்று அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை தி.நகரில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | கபாலி படத்தால் மன உளைச்சல்தான் - உண்மையை உடைத்த பா. இரஞ்சித்
இன்னும் நான்கு, ஐந்து நாள்களில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரதிராஜா விரைவில் குணமடைய வேண்டுமென்று திரையுலக பிரபலங்களும், ரசிகர்கள் பிரார்த்தனை செய்துவருகின்றனர்.
மேலும் படிக்க | அதிதி ஷங்கரின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்க் எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ