பாலா To லோகேஷ்..முதல் படத்திலேயே மாஸ் ஹிட் கொடுத்த முத்தான இயக்குநர்கள்..!

தமிழ் இயக்குநர்கள் சிலர் தங்கள் முதல் படங்களின் மூலமாகவே மாஸ் ஹிட் கொடுத்துள்ளனர். யார் அந்த முத்தான இயக்குநர்கள் தெரியுமா..?  

Written by - Yuvashree | Last Updated : Jul 20, 2023, 11:36 AM IST
  • தற்போதைய லோக்கேஷ் கனகராஜ் முதல் அப்போதைய பாலா வரை..முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த இயக்குநர்கள்.
  • லிஸ்டில் அட்லீயும் இருக்கிறார்.
  • வேறு யார் யார் தங்கள் முதல் படத்திலேயே ஹிட் கொடுத்துள்ளனர்..?
பாலா To லோகேஷ்..முதல் படத்திலேயே மாஸ் ஹிட் கொடுத்த முத்தான இயக்குநர்கள்..! title=

கோலிவுட் சினிமாவிற்குள் நுழையும் பல இயக்குநர்கள் தங்கள் முதல் படங்களில் சறுக்கல்கலையே சந்தித்துள்ளனர். இப்போது லெஜண்ட் இயக்குநர்களாக பார்க்கப்படும் பலரும் தங்கள் முதல் படங்களில் ஃப்லாப் கொடுத்துள்ளனர். ஆனால், சில இயக்குநர்களோ தங்களின் முதல் படங்களிலேயே முத்திரை பதித்து விட்டனர். யார் அந்த இயக்குநர்கள்..?

பாலா-சேது:

1999ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான படம், சேது. இதுவே பாலா இயக்கிய முதல் படமாகும். முதல் படமே இவருக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்க, அடுத்தடுத்து நந்தா, பிதாமகன் போன்ற ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். இப்போது இவர் ட்ரெண்டிங்கில் இல்லாத இயக்குநராக பார்க்கபப்ட்டாலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. 

மேலும் படிக்க | ரஜினி, அஜித், சூர்யாவை வைத்து படம் இயக்கும் லோகேஷ்..? அவரே கொடுத்த அப்டேட்..!

ஷங்கர்-ஜெண்டில் மேன்:

அர்ஜுனை வைத்து ஷன்கர் இயக்கியிருந்த படம் ஜெண்டில் மேன். தன் முதல் படத்திலேயே நேர்த்தியான திரைக்கதை மூலமாகவும் தொலை நோக்கு பார்வை மூலமாகவும் ரசிகர்களை ஈர்த்தார், ஷங்கர். அடுத்தடுத்து இவர் இயக்கிய இந்தியன், ஜீன்ஸ் போன்ற எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. சில வருடங்களுக்கு முன்பு வரை தோல்வி படங்களே கொடுக்காத இயக்குநர் என்ற பட்டத்தை ஷங்கர் தக்க வைத்து கொண்டிருந்தார். 

ராம்-கற்றது தமிழ்:

“பறவையே எங்கு இருக்கிறாய்..” பாடல் பலருக்கு இன்றளவும் இதமான சுவரமாக கருதப்படுகிறது. இந்த பாடல், கற்றது தமிழ் என்ற படத்தில் இடம் பெற்றிருந்தது. ஜீவா நடிப்பில் வெளியாகியிருந்த இந்த படத்தை இயகியவர், ராம். இதில் அஞ்சலி கதாநாயகியாக நடித்திருப்பார். இந்த படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் மாபெறும் வரவேற்பினை பெற்றது. இதையடுத்து இவர் இயக்கிய தங்க மீன்கள் படம் பலரது மனங்களை வருடியது. இவரது எழுத்துகளும் கூட இன்றளவும் பலரால் புகழப்பட்டு வருகிறது. 

நலன் குமாரசாமி-சூது கவ்வும்:

தமிழில் இதுவரை வெளியாகியுள்ள காமெடி-க்ரைம் த்ரில்லர் படங்களில் மிகவும் நல்ல படம் என பெயர் பெற்றிருந்தது, ‘சூது கவ்வும்’. இந்த படத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ரமேஷ் திலக் என பலர் நடித்திருந்தனர். இதுவே நலன் குமாரசாமியின் முதல் படம். இன்றும் இவர் இயக்கும் படங்களில் உள்ள காமெடிகளில் தனித்துவத்தை பார்க்க முடியும். 

சசிகுமார்-சுப்ரமணியபுரம்:

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர், சசிகுமார். சமூகத்திற்கு தேவையான கருத்துகளை சொல்லும் பிரபலங்களின் கூட்டத்தில் இவரும் ஒருவர். இவரது முதல் படம், சுப்ரமணியபுரம். இந்த படத்தில் துரோகம், காதல், நட்பு, பகை என எல்லா உணர்வுகளையும் காட்டியிருப்பார் சசிகுமார். இந்த படத்திற்காக இவருக்கு நிறைய பாராட்டுகளும் விருதுகளும் கிடைத்தது. 

அட்லீ-ராஜாராணி: 

சில படங்களே இயக்கியிருந்தாலும் இப்போது இந்தியா அளவில் பிரபலமாகியிருப்பவர், அட்லீ குமார். இவர் இயக்கிய முதல் படம், ராஜா ராணி. இந்த படத்தில் நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா என பலரை நடிக்க வைத்திருந்தார். இது, அட்லீக்கு ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்திருந்தது. தொடர்ந்து இவர் இயக்கிய மெர்சல், பிகில் போன்ற படமும் வெற்றி பெற்றன. இப்போது இவர், ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார். 

லோகேஷ் கனகராஜ்-மாநகரம்:

கடந்த சில மாதங்களாகவே ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு சினிமா பிரபலம், லோகேஷ் கனகராஜ். இவரது முதல் படம், மாநகரம். லோ பட்ஜெட் படமாக இருந்தாலும் தன் படத்தில் இடம் பெற்றுள்ள கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருந்தார். இந்த படத்தின் திரைக்கதை ரசிகர்களை கவர்ந்ததால், படம் வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில், அடுத்தடுத்து இவர் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களும் வெற்றி பெற்றன. தமிழ் சினிமாவின் எதிர்காலமாக பார்க்கப்படும் இயக்குநர்களுள் ஒருவர் இவர். 

கார்த்திக் சுப்புராஜ்-பீட்ஸா:

விஜய் சேதுபதியை வைத்து பீட்ஸா என்ற பேய் படத்தை இயக்கியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். ஒரு இரவில் நடக்கும் விஷயங்கள்தான் படத்தின் மொத்த கதை. முதல்படமே பெரிய ஹிட் கொடுக்க அடுத்தடுத்து தன் பாணியில் படம் எடுக்க ஆரம்பித்து தற்போது ஒரு ரசிகர் கூட்டத்தையும் பிடித்துள்ளார். இவர் இயக்கத்தில் அடுத்து ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியாகவுள்ளது. 

மேலும் படிக்க | ‘தொடர் தோல்வி, பணக்கஷ்டம்-தற்கொலை எண்ணம்..’ அப்பாஸ் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News