இந்த நடிகரை காதலிக்கும் ராஷ்மிகா மந்தனா..வெளியான போட்டோ

சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் இருவரும் ஒன்றாக வந்தனர், இதனால் இவர்களின் டேட்டிங் வதந்திகள் பரவி வருகின்றனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 3, 2023, 06:16 PM IST
  • ரஷ்மிகா மற்றும் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் ஜோடியாக சுற்றி வருகின்றனர்.
  • மந்தனா கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இந்த நடிகரை காதலிக்கும் ராஷ்மிகா மந்தனா..வெளியான போட்டோ title=

ராஷ்மிகா மந்தனா மற்றும் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் டேட்டிங்: ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரின் டேட்டிங் வதந்திகள் அவ்வப்போது வெளியாகி வந்தது. மேலும் இருவரும் பல்வேறு நேரங்களில் ஒன்றாகக் காணப்பட்டனர். அத்துடன் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் தான் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் பிரிந்துவிட்டார்களோ என பேச்சு கிளம்பியிருக்கிறது.

இந்நிலையில் தற்போது மும்பை விமான நிலையத்தில் தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸுடன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக வந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் தற்போது குழப்பம் அடைந்து, பலவிதமாக பேசத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றிலும் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸும், ராஷ்மிகா மந்தனாவும் ஜோடியாக கலந்து கொண்டார்கள். இதையடுத்து இவர்கள் இருவரும் காதலிக்கிறார் என ரசிகர்கள் பேசத் துவங்கியிருக்கிறார்கள்.

மேலும் படிக்க | என்னுடைய இந்த கனவு நினைவேறாமல் உள்ளது! வருத்தத்துடன் தெரிவித்த ரஜினிகாந்த்!

இதனிடையே இவர்களுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், தற்போது ராஷ்மிகா மற்றும் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் ஜோடியாக சுற்றுகிறனர். அதனால் மக்கள் அவர்களை பற்றி அதிகளவில் பேசுகிறார்கள். ராஷ்மிகாவுக்கு ஸ்ரீனிவாஸை மிகவும் பிடித்திருக்கிறது, இதனால் இவர்கள் இருவரும் காதலிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இருபினும் ராஷ்மிகாவும், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸும் காதலிப்பது உறுதியாகவில்லை. ஆனால் இந்த செய்தி வெளியான முதல் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | இயக்குனர் ஹரியின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறிய சூர்யா!

முன்னதாக ராஷ்மிகா மந்தனா கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தற்போது இவர் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரெயின்போ என்கிற படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் சாகுந்தலம் படத்தில் நடித்துள்ள நடிகர் தேவ் மோகன் நடிக்கவுள்ளார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 7ம் தேதி தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | விஜய்யை பின்தொடரும் சிவகார்த்திகேயன்! இந்த விசயத்திலுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News