Movies Update: புத்தாண்டுக்கு தமிழில் ரிலீஸாகும் 5 திரைப்படங்கள்

புத்தாண்டையொட்டி டிசம்பர் 31 ஆம் தேதி 7 திரைப்படங்கள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதோ அந்தப் படங்களின் பட்டியல்  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 19, 2021, 11:47 AM IST
Movies Update: புத்தாண்டுக்கு தமிழில் ரிலீஸாகும் 5 திரைப்படங்கள் title=

1. ஒபாமா

நடிகர் ப்ரித்வி பாண்டிராஜன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ’ஒபாமா’. இந்த திரைப்படத்தில் மூத்த நடிகர் ஜனகராஜ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் விக்ரம், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் டி.சிவா, கயல் தேவராஜ் போன்ற முக்கியப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். நானி பாலா இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார்.

2. ப்ளான் பண்ணி பண்ணணும்

இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ’பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். நகைச்சுவையான இப்படத்தினை தயாரிப்பாளர் ராஜேஷ் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகும் 3வது படம் இது.

ALSO READ | 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சிம்புவின் மாநாடு படம்; ரசிகர்கள் ஆரவாரம்!

3. வேலன்

பிக்பாஸ் புகழ் முகின் ஹீராவாக நடித்துள்ள திரைப்படம் வேலன். ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் கவின் இயக்கியுள்ளார். நடிகை மினாக்‌ஷி நாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாப்பாத்திரங்களில் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மலையாளத்தில் பிரபல இசையமைப்பாளராக இருக்கும் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

4. தீர்ப்புகள் விற்கப்படும்

நடிகர் சத்யராஜ் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ள படம் தீர்ப்புகள் விற்கப்படும். ஆக்ஷன் த்ரில்லர் படமான இப்படத்தை அறிமுக இயக்குநர் தீரன் இயக்கியுள்ளார். தடம் படத்தில் நடித்த ஸ்மிருதி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இர்களுடன் ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியான் சார்லீ ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

5. தண்ணி வண்டி

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தண்ணி வண்டி. மாணிக்க வித்யா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வில் அம்பு புகழ் சம்ஸ்கிருதி நாயகியாக நடித்துள்ளார். தேவதர்ஷினி, பாலசரவணன், 'காதல்' சுகுமார், விஜய் டிவி புகழ் கோதண்டம், 'ஆடுகளம்' நரேன், மதுரை முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ALSO READ | அரவிந்த சாமியின் சதுரங்க வேட்டை-2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News