கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 7 படங்கள் ரிலீசாகின. அதில் சென்னை 2 சிங்கப்பூர் படமும் ஒன்று. இந்த படத்தை அப்பாஸ் அக்பர் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இந்த படத்தை தயாரித்து இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரிலீசான சில நாட்களில் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் உள்ளிட்ட இணையதளங்களிலும் வெளியாகி இருக்கிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு பைரேசி இணையதளங்களுக்கு கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்,
சென்னை 2 சிங்கப்பூர் 6 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட படம். எங்களது வியர்வை, ரத்தம், உழைப்பு போட்டு இந்த படத்தை எடுத்திருக்கிறோம். இந்த படத்திற்காக மொத்தம் ரூ.8 கோடியை செலவு செய்துள்ளோம். இந்த பணத்தை ஒரு வாரத்தில் எங்களால் எடுக்க முடியாது. அதற்கு ஒரு 4 வாரங்களாவது வேண்டும்.
தற்போது தான் மக்கள் இப்படத்தை விரும்பி பார்க்க வருகின்றனர். மேலும் திரைகளின் எண்ணிக்கையும் கூடி வருகிறது.
எங்களுக்காக ஒரு 30 நாட்கள் படத்தை உங்கள் இணையதளத்தில் இருந்து நீக்கிவிடுங்கள். 31-வது நாளே மீண்டும் படத்தை வெளியிடுங்கள் என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்துக்கு கோரிக்கை வைத்து இருந்தார்.
தற்போது இந்த கோரிக்கையை ஏற்று `சென்னை 2 சிங்கப்பூர்' படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் நீக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை டூ சிங்கப்பூர் இயக்குனர் வேண்டுகோள்! என்ன செய்யப் போகிறது தமிழ்ராக்கர்ஸ்?@GhibranOfficial@AbbasAkbar@LokeshJey pic.twitter.com/yYGtSWOHAF
— Venuji (@venujitheboss) December 20, 2017