வெளியானது ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தின் Teaser!

புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படமான ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘மகாநதி’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது!

Updated: Apr 15, 2018, 12:12 PM IST
வெளியானது ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தின் Teaser!
Screen Grab (Youtube)

புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படமான ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘மகாநதி’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை சினிமாவாக எடுத்து வருகிறார் இயக்குனர் நாக் அஸ்வின். ‘வைஜெயந்தி மூவீஸ் - ஸ்வப்ன சினிமா’ நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, இப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகிறது. இப்படத்தில் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் துல்கர்சல்மான் ஜெமினி கணேசனாக வேடத்தில் நடிக்கிறார். 

வரும் மே மாதம் 9-ஆம் நாள் இப்படத்தினை வெளியிட திட்டமிட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் திரையுலகினர் ஸ்ட்ரைக் நடத்தி வருவதினால் இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் மட்டும் வேலை மும்மரமாக நடைப்பெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின்  டீஸரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.