அவருக்காக உயிரை விடுகிறோம்; கைக்கூட அசைக்கமாட்டாரா - வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் வாக்குவாதம்

வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 26, 2022, 02:15 PM IST
  • வாரிசு படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்துவருகிறது
  • விஜய்யை காண ரசிகர்கள் குவிந்தனர்
  • காவல் துறையினர் விரட்டியடித்தனர்
அவருக்காக உயிரை விடுகிறோம்; கைக்கூட அசைக்கமாட்டாரா - வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் வாக்குவாதம்

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய்யின் வாரிசு படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கிவருகிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஸ்ரீகாந்த், சரத்குமார், குஷ்பு, சங்கீதா, பிரபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு இந்தப் படத்தை தயாரிக்கிறார். குடும்ப சென்ட்டிமென்ட் நிறைந்த படமாக வாரிசு படம் உருவாகிவருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படபிடிப்பானது சென்னை எண்ணூர் சுற்றுவட்டார பகுதியான கேம்ப்பில் நடைபெற்று வரும் நிலையில் இந்தத் தகவலானது அந்தப் பகுதியை சார்ந்த விஜய் ரசிகர்களுக்கு தெரியவரவே அப்பகுதிகளை சுற்றியுள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் விஜய்யை காணலாம் என ஆவலுடன் வந்தனர். ஆனால் படப்பிடிப்பு பகுதியில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினர் ரசிகர்களை விரட்டியடித்தனர்

மேலும் படிக்க | வெந்து தணிந்தது காடு வெற்றி - சிம்புவுக்கு கார், கௌதமுக்கு பைக்... தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்

இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திரைப்படம் வெளியாகும்போது பேனர் வைத்து உயிரையே விட்ட ரசிகர்களை பார்த்து கையைக்கூட விஜய் அசைக்கமாட்டாரா என கொந்தளித்தனர்.

 

சிலர் ரசிகர் மன்ற நிர்வாகியான தங்களை இன்று உள்ளே அனுமதிக்காவிட்டால் நாளை இங்கு போராட்டம் நடத்துவோம். ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் அழைத்ததன் பேரில் பாதுகாப்பிற்காக வந்த தங்களையே பவுன்சர்கள் தாக்க முற்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் கூறினர்.

மேலும் படிக்க | கடன் வழங்கும் ஆப்... கதறி அழுத சீரியல் நடிகை - அதிர்ச்சி வீடியோ

இதற்கிடையே ரசிகர்கள் அதிகளவு கூடியதால், அந்தப் பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் தங்களது வீடுகளுக்கு விரைந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

மேலும் படிக்க | மாவீரனையும், கேப்டன் மில்லரையும் கைப்பற்றிய ஓடிடி - விலை எவ்வளவு தெரியுமா?

மேலும் படிக்க | குந்தவை, நந்தினியுடன் இசை புயல் - மும்பை ஸ்டூடியோவில் பொன்னியின் செல்வன் டீம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News