வெந்து தணிந்தது காடு வெற்றி - சிம்புவுக்கு கார், கௌதமுக்கு பைக்... தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்

வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து சிம்புவுக்கும், கௌதமுக்கும் பரிசுகளை வழங்கியிருக்கிறார் தயாரிப்பாளர்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 25, 2022, 03:07 PM IST
  • வெந்து தணிந்தது காடு படம் வெற்றி பெற்றுள்ளது
  • தொடர்ச்சியாக சிம்புவுக்கு இந்தப் படம் இரண்டாவது வெற்றி
  • சிம்புவுக்கு கார் பரிசு
 வெந்து தணிந்தது காடு வெற்றி - சிம்புவுக்கு கார், கௌதமுக்கு பைக்... தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் கிஃப்ட் title=

மாநாடு படத்துக்கு பிறகு சிம்பு இயக்குநர் கௌதம் வாசுதேவுடன் கைகோர்த்தார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ஐந்து நெருப்புகள் என்ற கதையை தழுவி வெந்து தணிந்தது காடு படம் உருவாக்கப்பட்டது. சமீபத்தில் இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.

 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் பின்னனி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக 'மல்லிப்பூ' பாடலும், அதன் காட்சியமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் அந்தப் பாடலை வைத்து ஏகப்பட்ட எடிட்களும் வெளியாகின. இதற்கிடையே வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகள் தொடங்க உள்ளதாக கௌதம் வாசுதேவ் அறிவித்துள்ளார்.

 

இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு 'டொயோட்டா வெல்ஃபையர்' சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். அதேபோல் இயக்குநர் கௌதமுக்கு 'ராயல் என்ஃபீல்ட்' பைக்கை ஐசரி கணேஷ் பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் ஏ.ஆர். ரஹ்மானுக்குள் ஏற்படுத்திய மாற்றம்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News