இரண்டாவது ட்ரைலரினை வெளியிட்டது "சத்யா" படக்குழு!

க்ஷணம் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்காக இத்திரைப்படம் உருவாகியுள்ளது

Last Updated : Dec 2, 2017, 06:44 PM IST
இரண்டாவது ட்ரைலரினை வெளியிட்டது "சத்யா" படக்குழு! title=

நாய்கள் ஜாக்கிரதை படத்திற்கு பிறகு நடிகர் சிபிராஜ் நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் "சத்யா". 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா முன்னதாக தனியார் பண்பலை நிலையம் ஒன்றில் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது ட்ரைலரினை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலக்ஷ்மி சரத்குமார், ஆனந்த்ராஜ், யோகி பாபு, மெரினா சதிஷ், ரவி வர்மா மற்றும் பலர் நடித்துள்ள அதிரடி திரில்லர் திரைப்படம் "சத்யா". 

க்ஷணம் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்காக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. சைமன் கே கிங் இப்படத்திற்கு இசையமைதுள்ளார்.

Trending News