வலிமை படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்!

தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த முதல் 10 படங்களின் பட்டியலில் வலிமை படம் இடம் பெற்றுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 25, 2022, 04:58 PM IST
  • வலிமை படம் வசூல் சாதனை படைத்துள்ளது.
  • இந்தியாவில் ரூ.119 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.
  • அஜித் தற்போது ak61 படத்தின் படப்பிடிப்பில் உள்ளார்.
வலிமை படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்!  title=

விஸ்வாசம் படத்திற்கு பின்னர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வலிமை' படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.  தமிழ் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பிற்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வலிமை'.  ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது, இருப்பினும் இந்த படம் பாக்ஸ் ஆபிசில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.  இப்படம் இந்தியாவில் ரூ.119 கோடிக்கும், உலகம் முழுவதும் ரூ.115 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | விக்ரம் படத்தில் கமலை இளமையாக காட்ட இத்தனை கோடி செலவா?

விநியோகஸ்தர்கள் சம்பாதித்ததை தவிர இந்த படம் இறுதியாக தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாய் ஈட்டியது.  தற்போது வெளியாகியுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த படங்களின் வரிசையில் வலிமை படம் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.  விஸ்வாசம் படத்திற்கு பின்னர் இரண்டாவது முறையாக அதிகம் வசூல் செய்த அஜித் படம் வலிமை என்று கூறப்படுகிறது.  இப்படம் திரையரங்குகளில் வெளியான முதல் இரண்டு வாரங்களுக்கு நன்றாக ஓடியது, ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் ஆரம்பத்தில் இருந்த அளவிற்கு படத்திற்கு கூட்டம் கூடவில்லை.  தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இப்படம் 6 கோடி ரூபாய் வசூல் செய்தது.  இந்த படம் மற்ற இடங்களை காட்டிலும் வெளிநாடுகளில் அதிக வசூலை பெற்று வெற்றியடைந்தது.

Valimai

தமிழ்நாட்டை தவிர்த்து தமிழ் ரசிகர்கள் அதிகம் இருக்கும் மலேசியா மற்றும் துபாய் போன்ற நாடுகளில் இப்படம் வெளியாகி அதிக வசூலை பெற்றது.  ஹெச்.வினோத் இயக்கிய இந்த படத்தில் கார்த்திகேய கும்மகொண்டா, ஹுமா குரேஷி, சைத்ரா ரெட்டி, அச்யுத் குமார், சுமித்ரா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.  அஜித் தற்போது ak61 படத்தின் படப்பிடிப்பில் உள்ளார்.  இந்த படத்தை விரைவாக எடுத்து முடித்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.  

மேலும் படிக்க | கேஜிஎப் சக்சஸ் பார்ட்டியில் அஜித்தின் பஞ்ச் வசனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News