ஆமா நயன்தாராவுடன் மனக்கசப்பு தான்.. உண்மையை உடைத்த த்ரிஷா

Nayanthara and Trisha Krishnan Fight : நயன்தாராவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு குறித்து நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ளார். இது தொடர்பான விவரத்தை இங்கே காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 24, 2024, 11:29 AM IST
  • தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களிலும் இருவரும் நடித்துள்ளனர்.
  • நயன்தாரா - த்ரிஷா இடையே விரிசல்.
  • இந்த விவகாரம் தொடர்பாக த்ரிஷாவே ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
ஆமா நயன்தாராவுடன் மனக்கசப்பு தான்.. உண்மையை உடைத்த த்ரிஷா title=

Nayanthara and Trisha Krishnan Fight : தமிழ் திரையுலகை தாண்டி தென்னிந்திய அளவில் பெரிய நடிகைகளாக இருப்பவர்கள், நயன்தாரா மற்றும் த்ரிஷா. பல புது நாயகிகள் வந்தாலும், இவர்களின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. அதேசமயம் தென்னிந்திய அளவில், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளாகவும் டாப் நடிகைகளாகவும் விளங்குபவர்கள் த்ரிஷா மற்றும் நயன்தாரா ஆவார்கள். இவர்கள் இருவரும் கடந்த 15-20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகின்றனர். ஆரம்ப காலத்தில் துணை நடிகையாக வந்த இவர்கள் இப்போது பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் நடித்த நாயகிகளாக இருக்கின்றனர். இவர்கள் இருவரும் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களிலும் இருவரும் நடித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் (Nayanthara and Trisha Krishnan) தமிழ் சினிமாவில் சுமார் இரண்டு தசாப்தங்களாக முன்னணி நடிகைகளாக நடித்து வருகிறார்கள். இருவரும் ஹீரோயின்களாக மட்டுமல்லாமல், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்திலும் சில படங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Sonia Aggarwal: சோனியா அகர்வால் நடிக்கும் 7G திரைப்படம்! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நயன்தாரா - த்ரிஷா இடையே விரிசல்:
இதனிடையே சமீப காலமாக இவர்கள் இருவர் இடையே சண்டை என்று கூறப்பட்டு வருகிறது. இதன் அஸ்திவாரம் கடந்த 2008 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்தின் மூலம் உருவானது. முதலில் இந்த திரைப்படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடிக்கவிருந்தது. ஆனால் கடைசி நேரத்துல நாயதாராவிற்கு பதிலாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டதாக அப்போது செய்திகள் வெளியாகின. அத்துடன் அவ்வப்போது இவர்கள் இருவரையும் இணைத்து அவ்வப்போது செய்திகளும் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.

இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக த்ரிஷாவே ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதன்படி அதில் அவர், நயன்தாராவிற்கும் எனக்கும் ஆரம்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது உண்மை தான், ஆனால் அவை தொழில் சம்மந்தப்பட்ட விஷயமாக இல்லாமல் தனிப்பட்ட விஷயமாகவே கருத்து வேறுபாடு இருந்தது.

ஆனால் அதன் பிறகு நாங்கள் அந்த பிரச்சனையை பேசி சரிசெய்து கொண்டோம். அதன் பிறகு எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு இருந்து வருகின்றது என்றார் த்ரிஷா. இதைப்பற்றி பழைய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் த்ரிஷா. 

மறுபுறம் இது தொடர்பாக பேசிய நயன்தாரா, கருத்து வேறுபாட்டுக்கு பின் சமரசம் செய்ய, த்ரிஷா என்னை முதலில் அணுகினார். இதையடுத்து நாங்கள் பேச தொடங்கினோம் என்று தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரையுலகிலேயே த்ரிஷா மற்றும் நயன்தாரா இருவரும் தான் முன்னிலை நடிகைகளாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | GOAT படத்திற்கு பிறகு பிரபு தேவா நடிக்கும் புதிய படம்! வெளியானது டீசர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News