2019ம் ஆண்டு ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனா திரைப்படம் Article 15. கிராம புறங்களில் நடக்கும் ஜாதிய வன்கொடுமைகளை பற்றி பேசும் இப்படத்தினை அனுபவ் சின்ஹா இயக்கி இருந்தார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆயுஷ்மான் குரானா இப்படத்தில் நடித்திருந்தார். சிறந்த கதை, திரைக்கதை, நடிப்பு, இசை என அனைத்திலும் இப்படம் விருது பெற்றது.
இதனையடுத்து இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது என்ற தகவல் வெளியானது. கடந்த வருடம் ஆகஸ்ட் 22ம் தேதி article 15 ரிமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார் என்றும் அருண் ராஜா இப்படத்தினை இயக்குகிறார் என்றும் அதிகார்வபூர்வ தகவல் வெளியானது. போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தினை தயாரிப்பதாக கூறியுள்ளனர்.
Happy to announce remake of Article 15 in Tamil starring @Udhaystalin to be directed by Arunraja Kamraj . It’s a @ZeeStudios_ Studios & @BayViewProjOffl Projects Production. We continue the tradition of remaking strong content this time with @mynameisraahul of Romeo pictures. pic.twitter.com/s1umdVaWYH
— Boney Kapoor (@BoneyKapoor) August 22, 2020
ஒருவருடமாக இப்படத்தினை பற்றிய தகவல்கள் வெளிவராமல் இருந்து வந்தன. ஆனால் படப்பிடிப்பு கோயம்பத்தூரில் நடைபெற்று வந்தது. இன்று இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகி உள்ளது. 'நெஞ்சுக்கு நீதி' என்று article 15 ரிமேக்கிற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஹிந்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இப்படம் தமிழிலும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கபடுகிறது. கனா திரைப்படத்திற்கு பிறகு இப்படத்தினை இயக்குகிறார் அருண் ராஜா காமராஜ். தற்போது அரசியலில் மிகவும் பிசியாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், நேரம் கிடைக்கும் போதுலாம் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
ALSO READ ரசிகர்களுக்கு திரைப்பட விருந்தாக அமையும் இந்த தீபாவளி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR