தங்கலான் to ரகு தாத்தா-ஆகஸ்ட் 15ஆம் தேதி மட்டும் 5 படங்கள் ரிலீஸ்! லிஸ்ட் இதோ..

Upcoming Movies Releasing On August 15th : வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று, தமிழ் மட்டுமன்றி இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 5 படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Aug 12, 2024, 11:48 AM IST
  • ஆகஸ்ட் 15 அன்று வெளியாகும் 5 படங்கள்
  • அனைத்துமே எதிர்பார்க்கப்பட்டவை..
  • முழு லிஸ்ட் இதோ!
தங்கலான் to ரகு தாத்தா-ஆகஸ்ட் 15ஆம் தேதி மட்டும் 5 படங்கள் ரிலீஸ்! லிஸ்ட் இதோ.. title=

Upcoming Movies Releasing On August 15th : இந்த 2024ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் கோலிவுட்டின் பெரிய பட்ஜெட் படங்களோ, பெரிய ஹீரோக்களின் படங்களோ வெளியாகவில்லை. ரிலீஸானவை அனைத்தும் வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களாகவே இருந்தது. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் இருந்துதான், கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. இதையடுத்துதான், ஒவ்வொரு பெரிய படங்களும் இனி அடுத்த 6 மாதங்களில் வெளியாக இருக்கின்றன. 

ஆகஸ்ட் 15ல் வெளியாகும் படங்கள்:

இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் இருந்தே பல படங்கள் வெளியாக ஆரம்பித்தன. சிறிய பட்ஜெட்டில் உருவானாலும் பேச்சி, ஜமா, போட் உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. அதே போல, கடந்த மாதம் வெளியான ராயன் திரைப்படமும் மக்களை ஈர்த்துள்ளது. சமீபத்தில் வெளியான ‘அந்தகன்’ திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. அந்த வகையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் படங்களையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். 

தங்கலான்:

பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், தங்கலான். இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருக்கும் இது, பெரும் பொருட் செலவில், கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியிருக்கிறது. இதில், நடிகர் விக்ரம் ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி திருவோது, பசுபதி, டேனியல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 

ஜிவி பிரகாஷ் குமார், இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஆக்‌ஷன் கதையாக உருவாகியிருக்கும் இது, கேஜிஎஃப் சுரங்கத்திற்கு அருகே வாழ்ந்த பழங்குடி மக்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் வெளியான படத்தின் டிரைலரும் மக்களின் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை, ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று திரையரங்குகளில் பார்க்கலாம். 

டிமான்டி காலனி 2:

அருள்நிதி நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான படம், டிமாண்டி காலனி. இதனை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். இந்த படத்தின் அடுத்த பாகம், தற்போது வெளியாக இருக்கிறது. இதில், அருள்நிதியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், பிக்பாஸ் அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு  ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. 

மேலும் படிக்க | OTT Movies : ஓடிடியில் ஒரே நாளில் இறங்கும் சூப்பர் ஹிட் புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

August 15 Movies

ரகு தாத்தா:

தமிழில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ஒரு நடிகை, கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வரும் 15ஆம் தேதி வெளிவர இருக்கும் படம்தான் ரகு தாத்தா. இந்த படத்தில் கீர்த்தியுடன் இணைந்து எம்.எஸ்.பாஸ்கர், ரவிந்திர விஜய், ராஜீவ் ரவீந்த்ரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சுமன் குமார் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். இந்தி திணிப்பு குறித்து பேசும் இந்த படத்தில் கீர்த்தி கயல்விழி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

டபுள் இஸ்மார்ட்:

பூரி ஜெகன்நாதன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம், டபுள் இஸ்மார்ட். சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ராம் பொத்தினேனி ந்ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக காவ்யா தப்பர் நடித்திருக்கிறார். சஜ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறார்.

மிஸ்டர் பச்சன்:

ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், மிஸ்டர் பச்சன். க்ரைம்-ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகியிருக்கிறது. இதில் ரவி தேஜா, பாக்கியஸ்ரீ போர்ஸ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை, வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் காணலாம். 

மேலும் படிக்க | August Releases : ஒரே மாதத்தில் ஒட்டுமொத்தமாக வெளியாகும் 10 புதுப்படங்கள்! முழு லிஸ்ட்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News